உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரிசியா, கோதுமையா; என்ன சாப்பிடுகிறீர்கள்? மக்கள் தொகை கணக்கெடுப்பில் 34 கேள்விகள்

அரிசியா, கோதுமையா; என்ன சாப்பிடுகிறீர்கள்? மக்கள் தொகை கணக்கெடுப்பில் 34 கேள்விகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, மூன்று இடங்களில், நவம்பர், 10ல் துவங்க உள்ளது. கணக்கெடுப்பில், அரிசி, கோதுமை, சிறுதானியம் போன்றவற்றில் எதை சாப்பிடுகிறீர்கள் என்பது உட்பட, 34 வகையான கேள்விகள் கேட்கப்பட உள்ளன.பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கும். அதன்படி, 2011ம் ஆண்டு, நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tejf52ao&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், கொரோனா காரணமாக அப்பணி நடக்கவில்லை. எனவே, 'நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2027 பிப்ரவரியில் நடக்கும்' என, மத்திய அரசு கடந்த ஜூனில் அறிவித்தது. அதையொட்டி, தமிழகத்தில் நவம்பர், 10 முதல் 30ம் தேதி வரை, மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு தாலுகாவிலும், 120 முதல் 150 ஆசிரியர்கள் களப்பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களை குறிப்பிட்ட தாலுகாவின் தாசில்தார்கள் கண்காணிப்பர்முதற்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாக்களிலும், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியிலும் இப்பணி நடைபெற உள்ளது. மாதிரி கணக்கெடுப்பு பணியை எளிமைப்படுத்தும் வகையில், நவ., 1 முதல் 7ம் தேதிக்குள், கணக்கெடுப்பு நடக்கும் பகுதியில் உள்ள மக்கள், தாங்களாகவே தங்களின் சுய விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை துவங்க உள்ளது. இது குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இந்த கணக்கெடுப்பில் முதல் முறையாக, மக்கள் அரிசி, கோதுமை, சிறுதானியம் போன்றவற்றில் எந்த வகை உணவை சாப்பிடுகின்றனர் என்ற விபரம் கேட்கப்பட உள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான ஆயத்தப் பணிகள் துவங்கி உள்ளன. ஒவ்வொரு தாலுகாவிலும், 120 முதல், 150 ஆசிரியர்கள் களப்பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களை, குறிப்பிட்ட தாலுகாவின் தாசில்தார்கள் கண்காணிப்பர். நகராட்சி பகுதிகளில், நகராட்சி கமிஷனர்கள் அல்லது பிற அதிகாரிகள் கண்காணிப்பர். தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, இந்த பணிகளை ஒட்டுமொத்தமாக கண்காணிக்கும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இவற்றை வழிநடத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கணக்கெடுப்பின் போது பொதுமக்களிடம் கேட்கப்பட உள்ள கேள்விகள்

* குடும்ப தலைவரின் பெயர் * பாலினம் * வயது* எஸ்.சி., - எஸ்.டி., / மற்றவை* திருமணமானவரா?* திருமணமான வயது* தாய்மொழி* மற்ற மொழிகள் தெரியுமா?* எழுத்தறிவு* கல்வித்தகுதி* பிறந்த இடம்* வீட்டின் தற்போதைய நிலை - அடுக்குமாடி வீடு, கல் வீடு, கூரை வீடு* வீட்டில் உள்ள வசதிகள் - 'ஏசி, டிவி, பிரிஜ், லேப்டாப், இன்டர்நெட்' வசதி, வாகனம் இன்னும் பிற* அடிப்படை வசதி - எரிவாயு வசதி, தண்ணீர், கழிப்பறை, கழிவுநீர் சேகரிப்பு வசதி இன்னும் பிற * உணவு வகை - அரிசி, கோதுமை, சிறுதானியம் இவை உட்பட, 34 கேள்விகள் பொது மக்களிடம் கேட்கப்பட உள்ளன.

டிஜிட்டலில் முதல் முறை

கடந்த காலங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு, காகித முறையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நடப்பாண்டு முதல் முறையாக டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது. இதற்காக, மத்திய அரசு, 'டி.எல்.எம்., மற்றும் எச்.எல்.ஓ.,' என்ற இரண்டு செயலிகளை உருவாக்கி உள்ளது. இதில், 'டி.எல்.எம்.,' எனும் 'டிஜிட்டல் லொக்கேட்டிங் மேப்' செயலி வழியே, கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வேண்டிய இடம் விபரம், களப்பணியாளர்களுக்கு வழங்கப்படும். எச்.எல்.ஓ., என்ற, 'ஹவுஸ் லிஸ்டிங் ஆப்ரேஷன்' செயலி வழியே, வீடுகள் கணக்கெடுப்பு பணி, சுயவிபரங்கள் சேகரிப்பு நடைபெற உள்ளது.

உணவு வகையை கேட்பது ஏன்?

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் போது கேட்கப்படும் கேள்விகளில், முதல் முறையாக உணவு வகை குறித்த கேள்வி, நடப்பாண்டு இடம் பெற உள்ளது. கடந்த காலங்களில் முக்கிய உணவாக திகழ்ந்த கேழ்வரகு, கம்பு போன்ற உணவுகள் மறைந்து, தற்போது, அரிசி, கோதுமை முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அடுத்து, சர்க்கரை நோயின் தாக்கம் காரணமாக, பொதுமக்கள் உணவு எடுத்துக் கொள்ளும் முறையும் மாறி உள்ளது. இதுகுறித்து அறியவே, இந்த கேள்வி தற்போது இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Keshavan.J
அக் 28, 2025 12:24

டுமீல் மக்கள் சாப்பிடுவது பிரியாணி அண்ட் டாஸ்மாக் quarter. அப்புறம் ஓசி பஸ், ஓசி மகளிர் பணம்.


RRR
அக் 28, 2025 11:21

திராவிஷ திருட்டு திமுகவுக்கு வோட்டு போடும் கேடுகெட்ட மக்கள் சாப்பிடுவது சோறோ அல்லது மற்ற தானியங்களோ அல்ல... அது "வேறு"


சிந்தனை
அக் 28, 2025 10:25

எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் என்பதை கண்டறிவதும் அவசியம் மதங்களுக்குள் இருக்கும் உட்பிரிவுகள் எத்தனை அவற்றில் எவ்வளவு பேர் உள்ளார்கள் என்பதையும் கண்டறிவது அவசியம் நாளைய பிரச்சனைகளுக்கான வாய்ப்புகளை பற்றி முன்பே நன்கு தெரிந்திருந்தால் தான் பிரச்சனைகளை முன்கூட்டி தடுக்க முடியும் அதுதான் புத்திசாலித்தனம்


SIVA
அக் 28, 2025 09:21

நோ ஒன்லி பிஸ்ஸா பர்கர் சிக்கன் ரைஸ் .....


அப்பாவி
அக் 28, 2025 09:20

கோதுமை சாதமும் அரிசி ரொட்டியும் சாப்புடறேன்னு சொல்லி சமாளிச்சேன்.


Loganathan Kuttuva
அக் 28, 2025 09:09

தகவல்களை சேகரிக்க தனியார் பள்ளி ஆசிரியர்களை அனுப்பலாம் .


GMM
அக் 28, 2025 08:33

பிரிட்ஜ், டிவி விவரங்கள் தேவையற்றவை. நில பட்டா விவரம் போதும். மாமிச உணவு, மது, புகை பிடிக்கும் விவரம். அரசு சலுகை இருக்கும் வரை சாதி, மத விவரம். ஆதார், சாதி, வரி, வருமான வரி செலுத்தும் விவரம். செல் போன் எண். பிறப்பிடம். வசிப்பிடம். அரசு, தனியார், சுய தொழில் விவரம். பள்ளி, கல்லூரி, அலுவலக, பொது வெளியில் குற்ற விவரம். பலதார, கலப்பு திருமணம், மத மாற்றம், விவகாரத்து விபரம் . பாஸ்போர்ட் விவரம். சேகரிக்க வேண்டும்.


sekar ng
அக் 28, 2025 08:09

கனக்கெடுப்பு பொருளாதார வளர்ச்சி பற்றியது இதில் அனைவரும் உதவ வேண்டும். அதற்கெதிராக அரசியல் செய்யும் ஸ்டாலினும் ஊடகமும்


Vasan
அக் 28, 2025 07:43

PIZZA BURGER NOODLES


SRIDHAAR.R
அக் 28, 2025 07:24

சரியான கேள்வி அதை தவிர அரசாங்க உத்யோகத்தில் இருப்பவர்கள் தகவல்களும் அறியபடவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை