உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூட்டு தல அக்கப்போருக்கு முடிவு எப்போது; மாணவர்கள் மோதலில் பறிபோனது உயிர்!

ரூட்டு தல அக்கப்போருக்கு முடிவு எப்போது; மாணவர்கள் மோதலில் பறிபோனது உயிர்!

சென்னை: 'ரூட்டு தல' விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் சென்னை கல்லூரி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மற்ற மாவட்டங்களை விட கல்லூரி மாணவர்களின் செயல்கள் சென்னையில் எப்போதும் வித்தியாசமானதாகவே இருக்கும். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 'ரூட்டு தல' விவகாரத்தை சொல்லலாம். குறிப்பிட்ட பஸ்களில், ரயில்களில் பயணிக்கும் கல்லூரி மாணவர்களில் ஒருவர் தலைவராக கொண்டாடப்படுவார். அவர் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் என்பது மாணவர்கள் தரப்பில் எழுதப்படாத விதி. இந்த 'ரூட்டு தல' பதவியை கைப்பற்றுவதில் மாணவர்கள் இடையே கடும் போட்டி இருக்கும். சென்னை பஸ்களில், புறநகர் ரயில்களில் கல்லூரி நேரங்களில் மாணவர்களிடையே 'ரூட்டு தல' விவகாரம் அடிதடி என்று மாறி கொலை வரை கூட செல்வதுண்டு. இந்நிலையில், சென்னையில் இந்த விவகாரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு; கடந்த வெள்ளியன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு கல்லூரியை சேர்ந்த மாணவர் சுந்தர் என்பவரை மற்றொரு கல்லூரியை சேர்ந்த மாணவர் தரப்பு கடுமையாக தாக்கியது. 'ரூட்டு தல' யார் என்ற பிரச்னையில் இந்த மோதல் எழுந்துள்ளது.படுகாயம் அடைந்த மாணவர் சுந்தரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தாக்குதல் நடத்தியதாக மற்றொரு கல்லூரி மாணவர்கள் 5 பேரை கைது செய்தனர்.இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் சுந்தர் இன்று உயிரிழந்தார். மாணவர் மரணத்தை தொடர்ந்து, மாணவர்கள் கல்லூரி வரும் மின்சார ரயில் தடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர் உயிரிழந்ததால், இந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது. மேலும், மாணவர் சுந்தர் படித்து வந்த கல்லூரிக்கு வரும் திங்கட்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

RAMAKRISHNAN NATESAN
அக் 10, 2024 11:29

எங்க புலிகேசி மன்னர் மாநில கல்லூரியில் பி ஏ படித்தவர் ............


RAMAKRISHNAN NATESAN
அக் 10, 2024 11:27

காலேஜுக்கு எதுக்கு போறோம் ன்னு உட்கார்ந்து யோசிக்க முடியாம செய்யுது போதைப்பொருட்கள் ..... ஹிஹி .... முன்னேறிய மாநிலம் ........


அப்பாவி
அக் 10, 2024 04:01

அப்பன் ஒழுங்கா இருந்தாத்தானே புள்ளைங்க ஒழுங்கா இருக்கும்? ரூட் தலைகள் உருவாகக் காரணம் உதவாக்கரை வீட்டுத் தலைகள்தான்.


தமிழ்வேள்
அக் 09, 2024 20:39

ரூட் தல பிரச்சினை சென்னையில் மட்டுமே உள்ள வில்லங்கம்.. இதற்கு புள்ளையார் சுழி போட்டு பெரிய பிரச்சினை ஆக வளரவிட்டு கல்வியை குட்டி சுவர் ஆக்கிய புண்ணியவான் அண்ணன் திருட்டு குவளையார்.. எந்த கல்லூரியிலும் தேர்தல் மாணவர் தலைவன் விவகாரம் தேவையில்லை...இன்டெர்னல் மதிப்பெண் ஐம்பது தேர்வு மதிப்பெண் நூறு மினிமம் பாஸ் மார்க் எண்பது என்று புழிந்து எடுத்தால் மாணவன் உருப்படுவான்..


Vijay D Ratnam
அக் 09, 2024 19:48

ரூட்டு தல என்பது சாதாரண விஷயமா, நாளைய தமிழகத்தின் எதிர்காலம். நல்ல குடும்பத்து பசங்க ஒழுங்கா படிச்சி ஏதாவது கிடைக்குற வேலைக்கு போயி கல்யாணம் பண்ணி ரெண்டு குட்டி போட்டு சிட்டில ஒதுக்குப்புறமா ஒரு பிளாட் வாங்கி லோன் போட்டு வீடு கட்டி கடனை கட்டி பிள்ளையை படிக்க வச்சி ரிட்டையர்டு ஆகி செத்து போவான். ஆனா இந்த ரூட்டு தல என்பது அப்டியா, பொதுவாழ்வில் முதல்படிதான் ரூட்டு தல . மூணு வருஷம் காலேஜ் போவான், பாஸ்லாம் பண்ணமாட்டான், பிறகு செலவுக்கு சின்ன சின்ன திருட்டு வேலைகள் பார்ப்பான், முச்சந்தில மூத்திர சந்துல நின்னுகிட்டு கஞ்சா பொட்டலம் லூஸ்ல விற்பான். பிறகு ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்வான், போராட்டம் ஆர்ப்பாட்டம், கல்லெறி, அடிதடி, ஜெயில் பெயில், வாய்தான்னு போலீஸ் கோர்ட் டாக்டர் வக்கீலுக்கெல்லாம் வேலை கொடுப்பான். அரசியல் செல்வாக்கு கிடைப்பதால் ஏதாவது டாஸ்மாக் பார் நடத்துவான், அப்டியே சைட்ல கஞ்சா, ஊசி, மாத்திரை, பவுடர் விற்பனைன்னு டெவலப் ஆவான். பொம்பள சகவாசம், மாமா வேலை, மாமூல் கலெக்ட் பண்ணுவது, கமிஷன் வாங்கி கொடுப்பது, அதிகாரிகளை கவனிப்பது என்று டெவலப் ஆவான். பிறகு ஏதாவது கட்சியில் கழகத்தின் வட்டம், கிளை, ஒன்றியம்ன்னு ஏதாவது பதவிக்கு வருவான். பிறகு ஆற்றுமணல் அள்ளுவான், டெவலப் ஆகி குவாரி ஏலம் ஏதாவது எடுத்து இரண்டாம் கட்ட அரசியல் தலைவரின் வப்பாட்டி குடும்பத்துக்கு நெருக்கமாகி பினாமி ஆகி மாவட்ட செயலாளர் ஆகி உன் தியாகம் பெரிது அதைவிட உன் உறுதி அதனினும் பெரிதுன்ன்னு சர்ட்பிக்கெட்டோட மந்திரியாக கூட ஆவான். ரூட்டு தல ஈஸ் தி ஃபர்ஸ்ட் ஸ்டேப் ஆப் பொலிட்டிக்கல் என்ட்ரி.


Lion Drsekar
அக் 09, 2024 19:20

அரசியல் கட்சிகளின் பரிணாம வளர்ச்சியே முழுக்காரணம், நானும் கல்லூரி ஆட்களில் மாணவர்கள் சங்கத்தின் தலைவராக இருந்திருக்கிறேன் , அவரவர்கள் தங்களது தேவைக்கும் மற்றவற்றிற்கும் மாணவ சமுதாயத்தையே முழுவதுமாக நம்பி இயங்குகிறார்கள் , இதற்க்கு நான் சாட்சி. வந்தே மாதரம்


panneer selvam
அக் 09, 2024 18:27

Nothing is going to change on Route Thala issue . It is a perineal problem mainly among Pachyappa and President arts colleges .Because of a death , some noise is raised by government and police . After some time same problem will reappear . Police will catch some student gangs and give advise them as usual . Let the drama continue


sankar
அக் 09, 2024 18:26

எல்லாம் ஒரே தருதலைகள்


Rajan
அக் 09, 2024 17:21

கல்லூரி பெயர்களையும் போட்டு இருக்கலாம். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க உதவும். பெயர் போன கல்லூரிகள் அதிகரித்து வருகிறது


ponssasi
அக் 09, 2024 17:16

படிக்காத, படிக்க பிடிக்காத மக்கு மாணவர்களை அரசு பணம் செலவழித்து இடஒதுக்கீடு, அரசு பள்ளி , முதல் தலைமுறை பட்டதாரி . தமிழ்வழி என திட்டங்களை தீட்டி கல்லூரிகளுக்கு ஒரு நல்ல நோக்கத்துடன் கொண்டு வருகிறது, இவர்களால் படிக்கும் மாணவர்களும் சீரழிகின்றனர். அரசும் சரி, அதிகாரிகளும் சரி கல்லூரியும் இவர்களின் போக்கை கண்டுகொள்வதில்லை.


முக்கிய வீடியோ