உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடி பாஸ்கர் த.வா.க.,வில் இணைப்பு; மேடையில் மகிழ்ந்த வேல்முருகன்

ரவுடி பாஸ்கர் த.வா.க.,வில் இணைப்பு; மேடையில் மகிழ்ந்த வேல்முருகன்

சேலம் : சேலம், தாதகாப்பட்டியில், த.வா.க., பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் சேலத்தை சேர்ந்த, பிரபல ரவுடி, கோழி பாஸ்கர் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், தலைவர் வேல்முருகன் முன்னிலை யில், த.வா.க.,வில் இணைந்தனர்.அப்போது வேல்முருகன் பேசியதாவது:இப்பகுதியில் பாஸ்கருக்கு, அன்பால் கட்டுண்ட கூட்டம் வாழ்கிறது. அவர் மேடையில் அமர்ந்துள்ளது, 1,000 மடங்கு உற்சாகத்தை தருகிறது. இப்பகுதியில் இருந்த கொடியை ஒருவர் உடைத்து சென்றுவிட்டார். அந்த படத்தை, போலீஸ் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பினேன். அவர்கள் விசாரித்து, சம்பந்தப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்தனர். சேலத்தில் நம் கட்சி கொடியை உடைக்க, இதுவரை எவனும் பிறந்து வரவில்லை. அதுவும் பாஸ்கர் கோட்டையில் கொடியை உடைத்துவிடுவார்களா? இவ்வாறு அவர் பேசினார்.

வளையத்தில் ரவுடி'

பாஸ்கர் குறித்து போலீசார் கூறுகையில், 'மூணாங்கரட்டை சேர்ந்தவர் பாஸ்கர், பயங்கரமான ரவுடி. இவர் மீது கொலை உள்பட, 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. 25 வழக்குகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளார். ரவுடிகள் பட்டியலில், 'ஏ பிளஸ், ஏ, பி, சி' என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில், 'ஏ பிளஸ்' பிரிவு என்பது, போலீசார் கூர்ந்து கவனிப்பர் என்பதாகும். அதில் பாஸ்கர் உள்ளதால், போலீசார் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகின்றனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Thamizh Selvan
மார் 18, 2025 08:30

ரவுடிகளை சேர்ப்பதில் எந்த கட்சியும் தயக்கம் காட்டுவதில்லை


pv
மார் 18, 2025 07:23

இனிமேல் Z பிரிவு பாதுகாப்பு கிடைக்கும்


சமீபத்திய செய்தி