உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேலத்தில் ரவுடி வெட்டிக் கொலை; 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

சேலத்தில் ரவுடி வெட்டிக் கொலை; 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட வந்த ரவுடி மதன்குமார் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நிபந்தனை ஜாமினில் , தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி மதன்குமார் கையெழுத்திட வந்தார். அவர் கையெழுத்திட்ட பிறகு, எதிரே உள்ள அசைவ உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, மதன்குமாரை 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தனர்.அந்த கும்பல் சரமாரியாக வெட்டியதில் ரவுடி மதன்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். பட்டப்பகலில், அதுவும் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே இந்த சம்பவம் நடந்தது. கும்பல் வெட்டுவதை கண்டதும் உணவகத்தில் இருந்தவர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். கொலையுண்ட மதன்குமார் மீது துாத்துக்குடியில் இரட்டை கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் தான் அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கையெழுத்திட வந்துள்ளதாக போலீஸ் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துாத்துக்குடியில் நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மதன்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

என்றும் இந்தியன்
ஜூலை 15, 2025 16:48

ரவுடி வெட்டிக்கொலை. நீ என்ன செய்கின்றாயோ அதுவே உனக்கு திரும்பக்கிடைக்கும் என்னும் பழமொழி ருசுவாகின்றது இதனால். ரவுடி வெட்டிக்கொலை நல்லவிஷயம் தானே 1 ரவுடி குறைவு ஆனது மொத்த லிஸ்டிலிருந்து


Tiruchanur
ஜூலை 15, 2025 14:36

THe vidiyal ஆட்சி. நான்கரை ஆண்டே ஸாக்ஷி


Padmasridharan
ஜூலை 15, 2025 13:46

ரவுடி இன்னொரு ரௌடிய வெட்டினா "வெறிச்செயல்". அஜித்குமார் என்பவரை காவலர்கள் கொன்னப்ப அந்தச்செயல் என்ன மாதிரி செயல் சாமி. .


naranam
ஜூலை 15, 2025 12:46

ஒரு கொலை காரனுக்கு மற்றொரு கொலைகாரனால் தான் சாவு. நல்லது தான்..


Ramesh Sargam
ஜூலை 15, 2025 12:24

எங்கண்ணே நம்ம முதலமைச்சர் அப்பா? அவருக்கு இப்படி தினம் தினம் தமிழகத்தில் நடக்கும் விஷயங்கள் தெரியுமா? அவரின் இரும்புக்கரம் என்ன ஆச்சுங்கண்ணே? துரு பிடித்து விட்டதா? வேற மாற்ற வேண்டியதுதானே. மாற்றி புதிய இரும்புக்கரத்தினால் குற்றவாளிகளை தண்டிக்கவேண்டியதுதானே? மேடைக்கு மேடை தமிழகம் எல்லாவற்றிலும் முதலிடம் என்று வாய் கிழிய பேசுகிறார். ஆனால் நான் கூறுகிறேன் குற்றச்செயல்கள் நடப்பதில் மட்டும்தான் தமிழகம் முதலிடம். வெட்கமாயில்லை அவருக்கு? ஆட்சியா புரிகிறார்?


xyzabc
ஜூலை 15, 2025 12:19

மாடல் ஆட்சியில் படங்கள் ஷூட் செய்ய நிறைய கதைகள் உள்ளன


lana
ஜூலை 15, 2025 12:08

இந்த ஆட்சியில் ரவுடி க்கே பாதுகாப்பு இல்லை. அப்புறம் சாதாரண மக்களுக்கு என்ன இருக்கிறது


lana
ஜூலை 15, 2025 12:07

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி உள்ளது.


முக்கிய வீடியோ