உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அதிகம்: ஐகோர்ட் கருத்து

கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அதிகம்: ஐகோர்ட் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அதிகம்; இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 18ம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்; சிலர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, அதற்கான காசோலை உடனடியாக வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கூடுதல் நிவாரணங்களையும் தமிழக அரசு தரப்பில் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கியதை எதிர்த்து முகமது கோஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இதனை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு இன்று (ஜூலை 5) விசாரித்தது. அப்போது, 'கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்?' என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இழப்பீடு தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

Ramesh Sargam
ஜூலை 08, 2024 19:37

௹. 10 லட்சம் நாட்டு எல்லையில் துரதிருஷ்ட விதமாக இறக்கும் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு இட கோருகிறேன்.


V RAMASWAMY
ஜூலை 07, 2024 07:21

அரசைக் குறை கூறி பயனில்லை, குற்றம் புரிந்தவர்கள் சாக்கடையில் விழைப்போகிறோம் என்று தெரிந்தும் இந்த கட்சிக்கு வாக்களித்து அரசு அமைக்கச்செய்த தமிழக வாக்காளர்கள் தான். இன்னும் அந்த தவறை செய்து கொண்டிருக் கிறார்கள் என்பது லோக் சபா தேர்தல் முடிவுகளிலிருந்து புரிகிறது. மாநில தேர்தலிலாவது விழிப்பார்கள் என்று நம்புவோம், இல்லையேல் அவர்களை கடவுள் கூட காப்பாற்ற முடியாது.


Raj Kamal
ஜூலை 08, 2024 15:55

கண்டிப்பாக காப்பாற்றுவார்.


Iniyan
ஜூலை 06, 2024 19:03

இழப்பு தொகை கொடுத்தது தவறு என்று சொல்ல என்ன வாய் இல்லையா நீதிபதிக்கு


Mahalingam Laxman
ஜூலை 06, 2024 14:51

WHY GOVERNMENT SHOULD PAY THEY SHOULD MAKE PEOPLE RESPONSIBLE FOR SELLING ALCHOCAL AND POLICE SILENTLY WATCHING AFTER GETTING MONEY FROM THEM TO PAY THE MEONEY. OR DMK PARTY SHOULD PAY FROM THEIR ACCOUNT AS THEY ABOLISHED "PROHIBITION" SO THAT THEIR PARTY MEN CAN MINT MONEY SHARING WITH THE CONCERNED MINISTER AND OFFICIALS.


KRISHNAN R
ஜூலை 06, 2024 14:34

எல்லாம்.. ஒரு........ நீதி தாங்க....


RAMAMOORTHY GOVI
ஜூலை 05, 2024 21:49

பத்து லட்சம் நிதி உதவி ஒரு கேடுகெட்ட உதாரணம்.இது மேலும் கள்ள சாராயத்தை ஊக்குவிக்கும்.திராவிட மாடல் திருந்தூது.மக்கள்தான் திருந்தவேண்டும்


M Ramachandran
ஜூலை 05, 2024 19:42

யார் வீட்டு பணம்? தன் குற்ற செய்யலை மறைக்க தடுக்க இல்லாத நிலைக்கு தண்டம் மக்கள் வரி பணமா? ஏன் பல நூரி கோஆடிகள் கொள்ளையடித்த கழக புள்ளிகளையும் சாரயா ஆலையகளய் வைத்து பொழப்பு நடத்தும் பல புள்ளிகலிடம் கேட்டு வாங்க வேண்டியது தானே? அந்த பண்ணதை கொடுத்தால் பராவாயில்லை. கடைய தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைய்யப்பாயா? மக்கள் புத்தி மழுங்கி இந்த திராவிட தகிடு தித்த கும்பலை ஒரு சமயம் மஞ்ச துண்டார் சொன்ன படி சோற்றல் அடித்த பிண்டங்கள் தான் என்பதை நிரூபிக்கிறார்கள் தேர்தெடுத்தாதால் கஷ்ட பட வேண்டியது தான்.


M Ramachandran
ஜூலை 05, 2024 19:41

யார் வீட்டு பணம்? தன் குற்ற செய்யலை மறைக்க தடுக்க இல்லாத நிலைக்கு தண்டம் மக்கள் வரி பணமா? ஏன் பல நூறு கோடிகள் கொள்ளையடித்த கழக புள்ளிகளையும் சாரயா ஆலையகளய் வைத்து பொழப்பு நடத்தும் பல புள்ளிகலிடம் கேட்டு வாங்க வேண்டியது தானே? அந்த பண்ணதை கொடுத்தால் பராவாயில்லை. கடைய தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைய்யப்பாயா? மக்கள் புத்தி மழுங்கி இந்த திராவிட தகிடு தித்த கும்பலை ஒரு சமயம் மஞ்ச துண்டார் சொன்ன படி சோற்றல் அடித்த பிண்டங்கள் தான் என்பதை நிரூபிக்கிறார்கள் தேர்தெடுத்தாதால் கஷ்ட பட வேண்டியது தான்.


vbs manian
ஜூலை 05, 2024 19:07

யார் வீட்டு பணம். அல்லி விடுகிறார்கள். பணத்தை கொடுத்து இயலாமையை மறைக்கும் முயற்சி


VENKATESAN V
ஜூலை 05, 2024 17:47

கருத்து கேட்க வேண்டாம் கொடுப்பதை நிறுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி