உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயிர் நகை அடமான கடன் தள்ளுபடி தொகையில் ரூ.1104 கோடி கூட்டுறவு வங்கிக்கு விடுவிப்பு

பயிர் நகை அடமான கடன் தள்ளுபடி தொகையில் ரூ.1104 கோடி கூட்டுறவு வங்கிக்கு விடுவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: பயிர் கடன், நகை அடமான கடன் தள்ளுபடி தொகையில் ரூ.1104 கோடியை மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு விடுவித்துள்ளது. இதனால் நிதிச்சுமையில் இருந்து வங்கிகள் தப்பித்தன. அதே நேரம் மீதமுள்ள ரூ.2185 கோடியை ஒதுக்க ஜூன் வரை ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்துள்ளது.தமிழகத்தில் 2021 ஜன., 31 நிலவரப்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர், நகை அடமான கடன் தள்ளுபடி செய்யப்படும் என அப்போதைய முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளின் பயிர், நகை அடமான கடன் தொகை ரூ.12 ஆயிரத்து 110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.இந்த கடன் தள்ளுபடி தொகையை மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அவ்வப்போது தமிழக அரசு விடுவித்து வந்தது. நிலுவை தொகையாக ரூ.3289 கோடியை வங்கிகளுக்கு வழங்காமல் அரசு வைத்திருந்தது. இந்த தொகையை 2025 மார்ச் 31 க்குள் விடுவித்தால் மட்டுமே தேசிய வங்கிகளில் கூட்டுறவு வங்கிகள் கடன் பெற தகுதி பெறலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசு ரூ.1104 கோடியை வங்கிகளுக்கு விடுவித்து, மீதத்தொகை ரூ.2185 கோடியை விடுவிக்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதையடுத்து கடன் நிலுவை தொகை ரூ.2185 கோடியை 2025 ஜூன் இறுதிக்குள் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு விடுவிக்க வேண்டும் என கால அவகாசம் அளித்து ரிசர்வ் வங்கி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நிதி தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு

மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிதிச்சுமையில் தவித்த மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு நிலுவை தொகை ரூ.1104 கோடியை விடுவித்தது, வங்கிக்கு ஏற்பட இருந்த நிதியிழப்பு பிரச்னையை சமாளிக்க உதவும். இதன் மூலம் மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் நிதி தட்டுப்பாடின்றி செயல்பட ஏதுவாக அமையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Raj Yesuvadiyan
ஏப் 04, 2025 15:53

பயிர் கடன் தள்ளுபடி செய்தமைக்கு நன்றி


Arjunan Arjunan.g
ஏப் 04, 2025 05:59

தினம் காலை செய்தி அறியனும்


K.V.S. senthilkumar K.V.S. senthilkumar
ஏப் 03, 2025 02:13

கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் தான் தள்ளுபடியா


M R Radha
ஏப் 01, 2025 22:28

போலி வாக்குறுதியை கொடுத்து அரை குறையாக கடன் தள்ளுபடி செஞ்சு தமிழகத்தின் கடன் மேலும் மேலும் உயர்கிறது. மறுபடியும் மத்திய அரசாங்கத்திடம் பிச்சை எடுப்பதற்க்கு வீர வசனம் பேசுவது. அதற்கு தான் அலிபாபாவின் 40பேர் இருக்குறாங்களே


Chandrasekaran Balasubramaniam
ஏப் 02, 2025 08:06

அப்போ விவசாயிகளுக்கும் மத்திய அரசு தான் கடன் தள்ளுபடி செய்கிறது என்பது உறுதியாக்கிறது இந்த செய்தி. ஆனால் இவனுக தாங்கள் தள்ளுபடி செய்ததாக தேர்தல் வாக்குறுதியில் பீற்றி கொள்ளுகிறானுக. இதை மக்களிடம் முறையாக சொல்வதற்கு மத்திய அரசில் ஆள் இல்லை.


தமிழன்
ஏப் 01, 2025 14:04

அதாவது ஜூன் மாதத்திற்குள் தமிழக அரசு இந்த தொகையை கட்டாவிட்டால் மத்திய வங்கிகள் தமிழக கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்காது அதை வைத்து விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி ஒழிக விவசாயிகளுக்கு கடன் வழங்குக என்று திமுக போராட்டம் செய்யலாம்


ஆரூர் ரங்
ஏப் 01, 2025 12:02

கூட்டுறவு வங்கிகளில் செயற்கையாக நிதித் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனரா? அரசியல் லாபத்திற்காக கடன் தள்ளுபடியை அறிவித்த ஆளும் கட்சியே அத்தொகையை கொடுப்பதே நியாயம். கூட்டுறவு வங்கிகள் நலிவடையும் நிலைக்கு இந்த தள்ளுபடி அரசியல்தான் காரணம் .


ஆரூர் ரங்
ஏப் 01, 2025 12:02

கூட்டுறவு வங்கிகளில் செயற்கையாக நிதித் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனரா? அரசியல் லாபத்திற்காக கடன் தள்ளுபடியை அறிவித்த ஆளும் கட்சியே அத்தொகையை கொடுப்பதே நியாயம். கூட்டுறவு வங்கிகள் நலிவடையும் நிலைக்கு இந்த தள்ளுபடி அரசியல்தான் காரணம்


சமீபத்திய செய்தி