உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14,808 கோடி செலவிடப்படாமல் அரசிடம் திரும்ப ஒப்படைப்பு

1540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14,808 கோடி செலவிடப்படாமல் அரசிடம் திரும்ப ஒப்படைப்பு

சென்னை: தமிழக அரசு, 2023 - 24ல் அறிவித்த, 1540 திட்டங்களுக்கு அரசு ஒதுக்கிய நிதியில், 14,808 கோடி ரூபாய் செலவிடப்படாமல், முழுமையாக மீண்டும் அரசுக்கு திரும்ப வழங்கப்பட்டது, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் 2023 - 24 நிதி ஆண்டுக்கான, மாநில அரசின் நிதி நிலை மீதான கணக்கு தணிக்கை அறிக்கை, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழக அரசு, 2023 - 24ம் ஆண்டு பட்ஜெட்டில், அதிகமான கொள்கை முடிவுகளை அறிவித்தது. ஆனால், வரவு செலவு திட்டத்தை பகுப்பாய்வு செய்ததில், பல திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. ஏராளமான அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் இல்லாததால் அமலாகவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலான அறிவிப்புகள், நடைமுறையில் உள்ள திட்டங்களின் தொடர்ச்சியாக அல்லது நீட்டிப்பாக இருந்தன. குடும்பத் தலைவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய், 'முதலமைச்சரின் காலை உணவு திட்டம்' போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறையின் முக்கிய கொள்கை அறிவிப்புகளான, ''பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்'' ''எண்ணும் எழுத்தும்'' ''நான் முதல்வன்'' போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. ''தமிழக உலக புத்தாக்கம் மற்றும் திறன் பயிற்சி மையம்'' என்ற திட்டம், 120 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்டது. அதற்கு ஒதுக்கப்பட்ட, 20 கோடி ரூபாயில், எந்த செலவும் செய்யாமல், முழுமையாக அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 14,808 கோடி ரூபாய், செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

chinnamanibalan
அக் 18, 2025 20:00

மகளிர் உரிமைத் திட்டம் ஒன்று மட்டும் முறையாக செயல்பட்டால் போதுமானது என நினைத்து இருக்கலாம்.


KOVAIKARAN
அக் 18, 2025 10:19

எப்படியும் அடுத்த முறை ஆட்சிக்கு வரமாட்டோம் என்று திமுகாவிற்கு தெரியும். எனவே, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினால் என்ன, நிறைவேற்றாமல் போனால் என்ன என்று அரசு அலுவர்களும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் நினைத்திருப்பார்கள். எனவே ஒதுக்கப்பட்ட நிதியை செலவழிக்காமல், திருப்பிக்கொடுத்துள்ளார்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 18, 2025 09:50

மகிழ்ச்சியான செய்தி. திராவிடஸ்தானில் கொஞ்சம் கொஞ்சமாக நேர்மை வளர்கிறது போலும். 1540 திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்று கணக்கு காட்டி 14,808 கோடி ரூபாய் களை ஆட்டயப்போடாமல் அரசுக்கு திரும்ப வழங்கியதில் மகிழ்ச்சி.


GG GG
அக் 18, 2025 12:07

அட நீங்கள் வேற சார், மதிய அரசு காசும் குடுப்பாங்களம் அப்புறம் கணக்கும் கேப்பாங்களாம்... அப்போ இந்த கணக்கு குடுக்குற மானம் கெட்ட வேலைக்கு அந்த வேலைய செய்யாமயே இருக்கலாம்... நமக்கு மாநில அரசு மாசம் மாசம் சம்பளம் குடுக்காமய இருக்க போகுது...?


duruvasar
அக் 18, 2025 09:48

என் மக்களுக்கு பயனில்லாத திட்டம் என்பதால் திருப்பி அனுப்ப பட்டது.ஆனால் கோவில் உண்டியல் பணத்தில்தான் கல்லூரி கட்டுவோம் . என்ன ஒரு புத்திசாலித்தனம்.


Kasimani Baskaran
அக் 18, 2025 09:38

தீயாய் வேலை செய்தது தெரிந்து விட்டது..


அப்பாவி
அக் 18, 2025 08:55

40 பர்சண்ட் அடிக்க வழியில்லாத திட்டங்கள். யாருக்கு வேணும்?


Ambedkumar
அக் 18, 2025 08:44

மத்திய அரசு 2023-24 ம் ஆண்டு தமிழகத்திற்கு ஒதுக்கிய ரூ. 13,133.00 கோடியில் ரூ. 10,083 கோடி செலவிடப்படாமலே கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று CAG அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நேற்று நமது மாநில நிதியமைச்சர் மத்திய அரசு உத்தர பிரதேசத்திற்கு அதிக நிதியும் தமிழகத்திற்கு குறைந்த நிதியும் கொடுப்பதாகக் குறை கூறினார். கொடுத்த பணத்தை செலவு செய்ய இயலவில்லை.


GG GG
அக் 18, 2025 12:12

சார், எங்களால பில் தயாரிச்சி ஆட்டைய போடுற மாதிரி திட்டம் கொடுங்கன்னா.... நாங்க பில் குடுத்து நாங்களே மாட்டிக்கிற மாதிரி திட்டம் போட்டு பணம் குடுக்குறீங்க... மழை காலத்துல ரோடு போடுறது, கூவம் சுத்தம் பண்றது மழை பெய்யும் நேரத்துல அப்போ ன தான் யாருக்கும் எவ்வளவு அளவுக்கு வேல செய்ஞ்சங்கன்னு தெரியாதுள்ள.. கேட்ட மழை ல அடிச்சி இட்டு போசிக்கின்னு மழை மேல பழியை போட்டுடலாம்


chennai sivakumar
அக் 18, 2025 08:30

வேலை செய்வதற்கு இஷ்டம் இல்லை. இதில் வேறு ஊதிய உயர்வு பழைய ஓய்வூதியம் கேட்டு போராட்டம். ஒன்னும் உருப்படுகிற மாதிரி தெரியவில்லை


Chandru
அக் 18, 2025 08:17

This action shows the inefficiency of the Government and complete lack of planning and involvement by the concerned departments


Natarajan Ramanathan
அக் 18, 2025 07:35

தேர்தல் செலவுக்கு பயன்படும்...