உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.15 கோடி மோசடி; சிப்காட் வருவாய் அதிகாரி சென்னையில் கைது

ரூ.15 கோடி மோசடி; சிப்காட் வருவாய் அதிகாரி சென்னையில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ரூ. 15 கோடி மோசடி தொடர்பாக தமிழக தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் வருவாய் அலுவலர் சூரிய பிரகாஷை கரூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சிப்காட் எனப்படும் தமிழக தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் வருவாய் அலுவலராக பணியாற்றி வருபவர் சூரிய பிரகாஷ். இவர் கடந்த 2016ம் ஆண்டு கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தார். அப்போது, தொழிலதிபர் நல்லுமுத்துவிடம் வெளிமாநிலங்களில் டெக்ஸ்டைல் தொடர்பான ஆர்டரை பெற்றுத் தருவதாக கூறி ரூ.15 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 2024ம் ஆண்டு கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று சென்னையில் வைத்து அதிகாரி சூரிய பிரகாஷை கரூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை கரூருக்கு அழைத்து சென்று இந்த மோசடி தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
மார் 06, 2025 06:50

இவனுக்கு லஞ்சம் குடுத்த நல்லமுத்துவை நோண்டி நொங்கெடுங்க. லஞ்சம் குடுத்திருக்காரு. ஒரு வேள்சி ஆர்டர் கிடைச்டிருந்தச்ல் எல்லாத்தையும் மூடிக்கிட்டு கம்னு இருந்திருப்பாரில்ல? மாத்தி யோசிங்க. தொப்பையை மட்டும் வளர்க்காதீங்க.


naranam
மார் 05, 2025 18:34

அதிமுகவின் திருட்டு மாடல் ஆட்சியில் எந்தெந்த சாருக்கெல்லம் பங்கு கிடைத்ததோ?


Appa V
மார் 05, 2025 20:04

na பக்கத்துல full stop போட மறந்துட்டாரா ?


naranam
மார் 05, 2025 18:02

திமுக அதிமுக எது ஆட்சியில் இருந்தாலும், திருடன் திருடிக்கொண்டு தான் இருக்கிறான்..திராவிடனின் மகிமை பற்றி பெருமை பட்டுக் கொள்ளலாம் தமிழன்!


Venkatesan Ramasamay
மார் 05, 2025 17:53

குங்கும பொட்டின் மங்களம்.... குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா.... இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா.... திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..


Barakat Ali
மார் 05, 2025 17:26

எந்த சாருக்கு பங்கு கொடுக்க இப்படி ரிஸ்க் எடுத்து சேர்த்தீங்க ஆப்பீச்சர் ????


Sampath Kumar
மார் 05, 2025 17:01

இந்தத்திரி ஆட்கள் பலர் பல அரசு நிர்வாணத்தில் செய்து கொண்டுதான் உள்ளார்கள் அய்யா இற்கு கட்டம் சரியில்லை போல மாட்டிகிட்டாரு இந்த லச்சனத்தில் குங்கும போட்டு வேற ஏன்டா ஹிந்துமத்தின் பெயரை கேடுகிறீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை