மேலும் செய்திகள்
15 கலைஞர்கள் விருது வழங்கி கவுரவிப்பு
26-Aug-2025
சென்னை: கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில், பொருளாதார நிலையில் பின்தங்கிய 80 கலைஞர்களுக்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இசை கருவிகள் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. தமிழக அரசு இசை கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன், இசை கருவிகள் மற்றும் கலைப் பொருட்களை வழங்கினார். பின், அமைச்சர் அளித்த பேட்டி: தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் பதிவு செய்துள்ள இசை கலைஞர்களில், பொருளாதார நிலையில் பின்தங்கிய 80 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்தும் நாதஸ்வரம், கூத்துமத்தளம், ஆர்மோனியம், கரக பொருட்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட கலைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. நலிவடைந்த கலைஞர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த இக்கருவிகள் உதவும். தற்போது, கலைத் துறையில் உள்ள பலர், பொருளாதாரத்தை காரணம் காட்டி, தங்களது கலையை கைவிட்டு வருகின்றனர். கலை அழிய நிதி ஒரு காரணமாக இருக்க கூடாது என்பதற்காக, இத்தகைய முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு கூறினார்.
26-Aug-2025