உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக வரி வருவாய் ஈட்டிய அதிகாரிகளுக்கு தலா ரூ.20,000

அதிக வரி வருவாய் ஈட்டிய அதிகாரிகளுக்கு தலா ரூ.20,000

சென்னை; தமிழக அரசின் வணிக வரித்துறை இணைஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம், அமைச்சர் மூர்த்தி தலைமையில், நேற்று சென்னையில் நடந்தது. இதில், வணிகவரித்துறை ஆணையர் ஜெகந்நாதன், இணை ஆணையர் பூங்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.வணிகவரித் துறைக்கு 61.30 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக வாங்கப்பட்ட ஏழு மகிந்திரா பொலீரோ வாகனங்கள், சென்னை வடக்கு, காஞ்சிபுரம், ஈரோடு, கடலுார், ஓசூர் மற்றும் விருதுநகர் கோட்ட அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன. இவற்றை, அமைச்சர் மூர்த்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.நடப்பு நிதியாண்டில் திடீர் ஆய்வு மற்றும் செயலாக்க நடவடிக்கைகள் காரணமாக, 3,027 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டில், 1,335 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டில் கூடுதலாக, 1,692 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.இதற்கு காரணமான வருவாய், வணிக வரித்துறை நுண்ணறிவுப் பிரிவின், 39 அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் தலா, 20,000 ரூபாய் ஊக்கத்தொகையை அமைச்சர் வழங்கினார்.மதுரை கோட்டம், போடிநாயக்கனுார் வரிவிதிப்பு சரகத்தை சேர்ந்த, மறைந்த வணிகர் சத்திய மூர்த்தியின் குடும்பத்தை சேர்ந்த மகாலட்சுமிக்கு, வணிகர் நல வாரியம் சார்பில், குடும்ப நல நிதி உதவித் தொகை, 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nagamani Nagarajan
மார் 29, 2025 21:53

வருவாய் துறையில் வேலை செய்வதே வரி வசூலிக்கத்தானே. அவர்களுக்கு சம்பளமே வேலை செய்வதற்குத்தானே. வேலை செய்யாதவர்களுக்கு அபராதம் விதித்து அதைக்கொடுக்கவேண்டியதுதானே . மக்கள் வரி பணத்தை அவர்களுக்கு ஏன் கொடுக்கவேண்டும் ? இது சரியான செயலாய் தோன்றவில்லை. வழி கடை தேங்காயை தெரு பிள்ளையாருக்கு உடைத்த கதைதான்


vadivelu
மார் 29, 2025 19:42

அப்ப, மாநிலம் வேறு தனியாக வரி வசூலிக்கிறது. என்னமோ மொத்தமா ஒன்றியம் வாங்குவதாக சொல்றீங்க.


சமீபத்திய செய்தி