உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்

சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்

சென்னை: சென்னை மற்றும் வேலூரில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ரூ.4.73 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.சுற்றுச்சூழல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் தொடர்பாக, சுற்றுச்சூழல் துறை முன்னாள் அதிகாரி பாண்டியன் மற்றும் தொழில் அதிபர்கள்மீது, அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக, கடந்த மூன்று நாட்களாக, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாண்டியன் வீடு, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி தெற்கு மாட தெருவில் உள்ள தொழிலதிபர் வீடு, சென்னை கே.கே.நகரில் டாக்டர் வீடு, கோயம்பேடு பகுதியில், தொழில் அதிபர் வீடு உட்பட, 10 இடங்களில், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். வேலூரிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.இந்நிலையில் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாண்டியன் மற்றும் சிலர் வீடுகளில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.4.73 கோடி ரொக்கம், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Tetra
மே 11, 2025 21:04

ஏம்பா? 1.43 கோடியெல்லாம் தமிழ்நாட்ல‌ ஜுஜுபிப்பா


Venkatesan Srinivasan
மே 10, 2025 09:30

இந்தியாவிற்கு தற்போது மிக அவசரமாக அதிகமாக இராணுவ செலவுகளுக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே அமலாக்க துறை மற்றும் ஏனைய பொருளாதார குற்ற தடுப்பு துறைகள் துரிதமாக பொருளாதார குற்றவாளிகளிடம் பணத்தை கறந்து மத்திய அரசுக்கு உதவிட வேண்டும்.


தமிழ்வேள்
மே 09, 2025 19:59

அண்ணார் தொர முருவன் அப்போலோ மருத்துவமனையில் பதுங்கியதற்கும், இதற்கும் ஏதாவது தொடுப்பு உண்டுமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை