உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கார்டுக்கு ரூ.5000...! நிவாரணம் அறிவித்தார் புதுச்சேரி முதல்வர்

ரேஷன் கார்டுக்கு ரூ.5000...! நிவாரணம் அறிவித்தார் புதுச்சேரி முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: மழை, வெள்ளம் பாதிப்பு எதிரொலியாக ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு தலா ரூ.5000 வெள்ள நிவாரணத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பெஞ்சல் புயலால் புதுச்சேரியில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது. அதி கனமழையால் அங்குள்ள மக்கள் கடும் பாதிப்பையும், சேதாரத்தையும் எதிர்கொண்டுள்ளனர். 4 பேர் மழையால் உயிரிழந்தனர். மழை, வெள்ளம் ஏற்படுத்திய சேதம் அதிகம் என்பதால் அரசு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந் நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மழை, வெள்ள பாதிப்புக்கான நிவாரணத்தை அறிவித்துள்ளார். அதன்படி, நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று கூறி உள்ளார். கனமழையால் பலியான 4 பேர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியையும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுதவிர, கனமழையால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ.40,000, ஆட்டிற்கு ரூ.20,000, படகு சேதம் அடைந்திருந்தால் ரூ.10,000, வீடு முழுமையாக சேதம் அடைந்திருந்தால் ரூ.20,000, விளை நிலம் ஹெக்டேருக்கு ரூ.30,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தாமரை மலர்கிறது
டிச 02, 2024 20:26

பிஜேபி ஆதரவான கட்சியாக இருந்தாலும், தவறு தவறே. இலவசம் நாட்டை சீர்கெடுக்கும். இது வோட்டுக்கு காசு என்பதை மறைமுகமாக கொடுப்பது தான்.


Ramesh Sargam
டிச 02, 2024 20:04

அப்படி என்றால் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் எதுவும் இல்லையா, அவர்கள் எவ்வளவுதான் மழையால் பாதிக்கப்பட்டிருந்தாலும்? ஆனால் தேர்தல் நேரத்தில் அவர்கள் வோட்டு மட்டும் வேண்டும். இது என்ன நியாயம் முதல்வரே?


வைகுண்டேஸ்வரன்
டிச 02, 2024 21:11

சார், எங்கள் பணியாளரின் உறவினர் புதுவையில் இருக்கார். வெள்ளத்தில் அவரோட ரேஷன் கார்டும் அடிச்சுக்கிட்டு போயிடுச்சு. என்ன செய்யறது தெரியலையாம்.


SURYANARAYANAN
டிச 02, 2024 20:04

நடப்பது BJP GOVT.


வைகுண்டேஸ்வரன்
டிச 02, 2024 18:11

நல்ல முடிவு. ஆனால் இதுவே, தமிழ்நாடு அரசு அறிவித்தால்???? 5000 குடுத்தா ஆச்சா? இலவசம் ஒழிக, 4000 கோடி எங்கே? கூடவே கோட்டர் குடுங்க" என்றெல்லாம் கூவியிருப்பார்கள்.


visu
டிச 02, 2024 18:58

ஏங்க என்ன கேட்க கூடாதாதயா மக்கள் கேட்குறாங்க 4000 கோடி மழை நீர் வடிகாலுக்கு செலவு அன்னத்தை என்ன ஆச்சு கேட்குறாங்க புதுச்சேரில அதுமாதிரி ஏதும் சொல்லலியே


nagendhiran
டிச 02, 2024 19:36

தம்பி இலவசம் வேற? நிவாரணம் வேற? இலவச பஸ் பெண்களுக்கு யாராவது கேட்டாங்களா? குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் யாராவது கேட்டாங்களா?


sankaranarayanan
டிச 02, 2024 17:54

தமிழ் நாட்டில் எப்போது எவ்வளவு ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைவர்க்கும் ருபாய் ஐயாயிரம் கொடுக்கப்போகிறார்கள்?


Venkatesan Ramasamay
டிச 02, 2024 17:48

அட்ரா சக்க ... அட்ரா சக்க...அட்ரா சக்க...அட்ரா சக்க..அட்ரா சக்க் க...


தமிழ்வேள்
டிச 02, 2024 17:37

தமிழகத்திலும் சூட்லர் கொடுப்பார் ..அதாவது ஆயிரம் கொடுத்துவிட்டு , ஐந்தாயிரம் என்று கணக்கு எழுதி , அதில் நாலாயிரத்தை உடன்பிறப்போடும் உளுத்தம்பருப்போடும் பங்குபோட்டு கொள்ளும் அண்ணா வழி , முத்தமிழ் வித்தவர் வழி வேலைகள் குறைவற நடக்கும் ....


Madras Madra
டிச 02, 2024 17:05

அருமை. தமிழகத்தில் ஒரு சேதாரமும் இல்லியா ?


Nandakumar Naidu.
டிச 02, 2024 16:52

பாராட்டப்பட வேண்டிய விஷயம். புதுச்சேரி மக்களுக்கு சந்தோஷமான விஷயம்.


வைகுண்டேஸ்வரன்
டிச 02, 2024 18:25

அங்கே தமிழ் நாடு அரசின் நிவாரணங்கள் பற்றிய செய்தியில் ஒருத்தர், "மலிவான நிவாரணத் தொகை யாரும் வாங்காதீர்கள், எப்போது சிந்திப்பீர்கள் " என்று சொல்கிறார். ஜே ஒருவேளை வட நாட்டில் 10 அல்லது 12 ஆவது மாடியில் வசிக்கிறார் போல.


புதிய வீடியோ