உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ரூ.396 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ரூ.396 கோடி ஒதுக்கீடு

சென்னை; அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க, 396 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில், ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை போன்றவை இன்னும் வழங்கப்படாமல் உள்ளன. தமிழகம் முழுதும் 8,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். அவர்களுக்கான பணப்பலன்களை தற்போது, அரசு படிப்படியாக வழங்கி வருகிறது.நேற்று போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி, 2023ம் ஆண்டு மே மாதம் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, உயிரிழந்தவர்களுக்கான பணப்பலன் வழங்க, 396.09 கோடி ரூபாய் நிதியுதவி ஒதுக்கி, அரசாணை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Jayakumar Jayakumar
பிப் 17, 2025 18:24

தமிழகத்தின் திற ஊழியர்களுக்கு அன்றன்று அனைத்து தொகையையும் செட்டில் செய்யும் தமிழக அரசு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மட்டும் இரண்டு ஆண்டு மூன்றாண்டு எதையும் கொடுக்காமல் காலம் தாழ்த்தினால் எப்படி திட்டமிடப்பட்டு குடும்பம் செய்வது


Bhaskaran
பிப் 13, 2025 21:28

அதிலேயும் தில்லுமுல்லு செய்யாமல் அவங்களுக்கு உரியவை கொடுத்திருங்க பாவம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை