உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரூ.80,000 பறிமுதல்

 ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரூ.80,000 பறிமுதல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கணக்கில் வராத 80,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. செங்கல்பட்டு அடுத்த பரனுாரில், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு வரும் மக்களிடம், இடைத்தரகர்கள் வாயிலாக அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக, செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சரவணன் தலைமையிலான 10 போலீசார், நேற்று காலை 11:00 மணிக்கு, மேற்கண்ட அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர். மாலை 6:00 மணி வரை நடந்த சோதனையின்போது, அதிகாரிகள், இடைத்தரகர்களிடம் விசாரணை நடத்தினர். 80,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை