உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முஸ்லிம்களும் சூர்ய நமஸ்காரம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பொது செயலர் அறிவுறுத்தல்

முஸ்லிம்களும் சூர்ய நமஸ்காரம் செய்ய ஆர்.எஸ்.எஸ்., பொது செயலர் அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோரக்பூர்: “சுற்றுச்சூழல் பாதுகாப்பின் நலனுக்காக ஆறுகள், மரங்கள் மற்றும் சூரியனுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் முஸ்லிம்கள் எதையும் இழக்க மாட்டார்கள்,” என, ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள சந்த் கபீரில் ஹிந்து சம்மேளனம் நடைபெற்றது.

இதில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹோசபலே பங்கேற்று பேசியதாவது:

நம் மக்களின் புத்திசாலித்தனம், திறமை மற்றும் கடின உழைப்பு, உலகில் உள்ள அனைவராலும் வரவேற்கப்படுகிறது. நம் நாட்டின் கலாசாரத்தை பற்றி அறிய ஏராளமான மக்கள் ஆர்வமாக உள்ளனர். ரஷ்யாவில், தேவாலயங்களை கோவில்களாக மாற்ற அங்குள்ள மக்கள் அனுமதிக்கின்றனர். அமெரிக்காவில், ஹிந்துக்கள் எங்கு வாழ்ந்தாலும் கோவில்கள் கட்டப்படுகின்றன. அங்குள்ள மக்கள் சூரிய நமஸ்காரம் மற்றும் பிராணயாமம் செய்கிறார்கள். அவர்கள் சமஸ்கிருதத்தை கற்கின்றனர். ஜெர்மனியில் உள்ள பல பல்கலைகளில், சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொருவரின் மதங்களையும், கலாசாரங்களையும் மதிக்கும் இந்தியா, கலாசாரம் மற்றும் அறிவில் உலகளாவிய தலைமையாக மாற வேண்டும். இந்த தொலைநோக்கு பார்வையை மனதில் வைத்து, ஹிந்து மதம், ஹிந்துத்வா மற்றும் ஹிந்து கலாசாரத்தில் சிறந்ததாக உள்ளவற்றை நம் வாழ்வில் இணைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தனிநபரும், அவ்வாறு செய்ய வேண்டிய கடமை உள்ளது. முஸ்லிம்களும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் நலனுக்காக ஆறுகள், மரங்கள் மற்றும் சூரியனுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் அவர்கள் எதையும் இழக்க மாட்டார்கள். நம் முஸ்லிம் சகோதரர்கள், சூரிய நமஸ்காரம் செய்வதால் அவர்களுக்கு என்ன தீங்கு நேர்ந்துவிடப் போகிறது? சூரிய நமஸ்காரம் செய்வதால், அவர்கள் மசூதிக்கு செல்வது தடுக்கப்படும் என்பது அர்த்தமல்ல. சூரிய நமஸ்காரம் மற்றும் பிராணயாமம் ஆகியவை உடல்நலம் சார்ந்த மற்றும் அறிவியல்பூர்வமான நடைமுறைகள். இதை செய்வதற்காக தொழுகை செய்வதை கைவிட வேண்டும் என நாங்கள் சொல்லமாட்டோம். மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றலாம். ஆனால், மனித மதத்திற்கு அவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

தஞ்சை மன்னர்
டிச 20, 2025 12:12

இந்த இயக்க கும்பல் கடைசி வரை திருந்த போவது இல்லை இந்தியாவை வளர்ச்சி அடையவைக்கப்போவது இல்லை நாம் அமெரிக்கா சீனா சிங்கப்பூர் லண்டன் என்று சொல்லிக்கொண்டே இருக்கத்தான் போகிறோம் போல


M.Sam
டிச 19, 2025 16:18

அவவுங்க சந்திரா நமஸ்காரம் தான் பண்ணுவாங்க தெரியாத உங்க உள்ளதா புல்லட்டை வேலையை vaera yaarkita வேணும் ஆடுங்க


Rajarajan
டிச 19, 2025 12:05

பாஸ், முதல்ல நாம் அனைவரும் இந்தியர்கள் மற்றும் சகோதரர்கள் அப்படிங்கற எண்ணம் வந்தாலே போதும், செயலும் தானே மாறும். அதுவரை என்ன சொல்லியும் பயன் இல்லை. எரிவதை இழுத்தால், கொதிப்பது தானே அடங்கும். தவறான எண்ணத்தை ஊக்குவிக்கும் மற்றும் அதற்க்கு துணைபோகிறவர்களை அரசியலில் ஒதுக்கினால், தானாகவே நடவடிக்கை மாறும். வோட்டு போடும் நாம் தான் இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்தியா ஒரே நாடு என்று சொல்பவர்களை விட, தமிழகம் / திராவிட நாடு / ஆரியன் / திராவிடன் அப்படினு பிரிவினை பேசறவங்களுக்கு தானே வோட்டு போடறோம். கொள்ளி கட்டையை எடுத்து நாமே நமது தலையை சொரிந்துகொண்டு, பின்னர் வருத்தப்பட்டு என்ன பயன் ?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 19, 2025 12:00

மூர்க்கர்கள் தமிழ்த் தாயை வணங்குவார்களா என்று கேளுங்கள் .......


Rathna
டிச 19, 2025 11:41

1000 வருடங்கள் கொண்டு வர முடியாத சமூக நாகரீகத்தை, மற்றவர்களுடன் அனுசரித்து வாழ்வதை நீங்கள் கொண்டு வர முடியுமா? நடக்கிறத பேசுங்கப்பா நீங்க செய்ய வேண்டியது ஹிந்து சமூகத்தில் விழிப்பறிவை கொண்டு வருவது. அதை செய்ய தெரியவில்லை. தேவை இல்லாமல் பேசி என்ன பயன்?


Rathna
டிச 19, 2025 11:18

குண்டு வைக்காமல், கலவரம் செய்யாமல் இருந்தாலே போதும்.


Rathna
டிச 19, 2025 11:14

அவனவன் தனது சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை நீக்கினால் நல்லது. எல்லாரும் சகோதரர்கள் என்று சொல்லும் சில சமூகத்தில் 72 சாதிகள், ஒருத்தனுக்கு ஒருவன் சில வழிபாட்டு வித்தியாசத்திற்காக கொன்று கொள்கிறான். பல வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு உள்ளே செல்ல வழியில்லை. சில சமூகத்தில் பெண்களுக்கு இருட்டு அறை. சில சமூகத்தில் பெண்கள் மன்னிப்பு பூசாரியாக முடியாது. இந்த மாதிரி நபர்கள் ஹிந்து சமூகத்தை பழிக்கிறான்


என்னத்த சொல்ல
டிச 19, 2025 10:14

அவர்கள் சூர்ய நமஷ்காரம் பண்ணுனா என்ன பன்னாட்டி உனக்கு என்ன.. இந்துக்களுக்கள் இருக்கிற ஏற்றத்தாழ்வுகளை நீக்க என்னைக்காவது நீங்கள் யோசித்தது உண்டா..


ஆரூர் ரங்
டிச 19, 2025 10:41

ச‌ச்சா‌ர் கமிட்டி அறிக்கையில் 61 முஸ்லிம் தாழ்த்தப்பட்ட சாதிகள் இருப்பதாக கூறியுள்ளது. அது எப்படி?


TCT
டிச 19, 2025 09:20

Common Secularist. Let us make this as Big Issue. But for Thiruparangkundram you keep all your holes closed


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 19, 2025 09:41

How can you say RSS keeping mum on Tiruparangundram >>>>


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 19, 2025 09:14

மொதல்ல, வந்தே மாதரம் சொல்ல வையுங்க பார்ப்போம் ........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை