உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி வழங்கியது ஐகோர்ட்; தமிழக அரசுக்கு குட்டு

ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி வழங்கியது ஐகோர்ட்; தமிழக அரசுக்கு குட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.விஜயதசமியை முன்னிட்டு வரும் 6ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் நேற்றைய விசாரணையின் போது 42 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட், தமிழக அரசும், போலீசாரும் கண்ணாமூச்சி ஆடுவதாக கடும் அதிருப்தி தெரிவித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5ubtmht5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், கோர்ட்டின் பொறுமையை சோதிக்க வேண்டாம், தி.மு.க., பவள விழாவுக்கு மட்டும் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கியது எப்படி என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியது. ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் விதிக்கப்பட்டு உள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி முடிவு எடுத்து இன்று தெரிவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தது.இந் நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 42 இடங்களுடன் கூடுதலாக மேலும் 10 இடங்களுக்கு அனுமதி தரப்படுவதாகவும், 6 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தமிழக அரசில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நிபந்தனைகள் அடிப்படையில் மொத்தம் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி அளித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம் வருமாறு; குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி, கொள்கை மாறுபாடு கொண்ட மக்கள் வசிக்கும் பகுதி என்று கூறி ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி மறுக்கக்கூடாது. நிபந்தனைகளுடன் 6 இடங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 58 இடங்களில் பேரணிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எந்த புதிய நிபந்தனைகளையும் விதிக்கக்கூடாது. எதிர்காலத்தில் ஆர்.எஸ். எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க மறுக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதி ஜெயச்சந்திரன் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

Nandakumar Naidu.
அக் 01, 2024 22:12

திமுகவிற்கும் , ஸ்டாலினுக்கும் ஏன் ஆர் எஸ் எஸ் என்றாலே வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது? அது ஒன்றும் இல்லை இவர்களின் ஊர்வலத்தை அனுமதித்தால் சிறுபான்மையின் ஒட்டுக்கள் கிடைக்காது என்று பயம். இது மதசார்பற்ற அரசு அல்ல, இது மத வெறி பிடித்த அரசு.


தமிழ்நாட்டுபற்றாளன்
அக் 01, 2024 22:00

‘இந்தியா மதச்சார்பற்ற நாடு விரைவில் நெறிமுறைகள்...’ - ‘புல்டோசர்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி


தமிழ்நாட்டுபற்றாளன்
அக் 01, 2024 21:56

இது ஒரு UNREGISTERED இயக்கம்.இதற்கு ஏன் அனுமதி


Prasanna Krishnan R
அக் 02, 2024 07:04

உங்களுக்கு தைரியம் இருந்தால், உங்கள் அசல் பெயரில் கருத்துகளை இடுங்கள். நேதாஜியின் ராணுவத்தில் ஆர்எஸ்எஸ் அங்கம் வகித்தது. திமுக தரகர் போல் கொச்சைப்படுத்தாதீர்கள்.


Viduthalai Murasu
அக் 01, 2024 21:31

லட்டு விவகாரத்தில் உயர்நீதி மன்றம் அரசுக்கு கண்டம் தெரிவித்தது. அரசுக்கு குட்டு என்று செய்தி வெளியிட தயாரா


Jagan (Proud Sangi)
அக் 01, 2024 21:27

கழகம் அடுத்த ஆண்டும் இதேயே செய்யும். நீதித்துறை குட்டு முக்கியமல்ல சிறுபான்மை கூவல் தான் முக்கியம்


Jagan (Proud Sangi)
அக் 01, 2024 21:22

கழகம் என்றுமே நீதித்துறையின் குட்டுகளுக்கு பழகிய ஒன்று தான். நோக்கம், சிறுபான்மையிருக்காக செய்தோம் என்று அவர்களிடம் சொல்லலாம் அது பதிவு செய்தாகிவிட்டது. வேற வேலை இருந்தால் பார்க்கலாம்.


Ramesh Sargam
அக் 01, 2024 20:42

எத்தனை குட்டு வாங்கினாலும், ஆட்சியில் உள்ளவர்களுக்கு புத்தி வரப்போவதில்லை.


Davamani Arumuga Gounder
அக் 01, 2024 20:29

ஆனால் RSS பேரணிக்கு மட்டும் மிகப்பெரியஅளவில் போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது .. என்று அரசால், காவல் துறையால் கூறப்படுவது .. ஏன்? என்பது ஆராயப்படவேண்டிய ஆச்சரியமாகும் .


rasaa
அக் 01, 2024 20:27

நல்ல தீர்ப்பு. சிறுபான்மை அரசுக்கு நல்ல குட்டு


AMLA ASOKAN
அக் 01, 2024 19:50

தமிழகம் முழுவதும் பல கோடி மக்கள் கலந்துகொள்ளும் பலவிதமான பண்டிகைகள் திருவிழாக்கள் அமர்களமாகவும் அமைதியாகவும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன . எவ்வித அசம்பாவிதமும் நடப்பதில்லை . ஆனால் RSS பேரணிக்கு மட்டும் மிகப்பெரியஅளவில் போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுவது ஏன் என்பது ஆராயப்படவேண்டிய ஆச்சரியமாகும் .


Davamani Arumuga Gounder
அக் 01, 2024 20:31

தமிழகம் முழுவதும் பல கோடி மக்கள் கலந்துகொள்ளும் பலவிதமான பண்டிகைகள் திருவிழாக்கள் அமர்களமாகவும் அமைதியாகவும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன . எவ்வித அசம்பாவிதமும் நடப்பதில்லை.


சமீபத்திய செய்தி