உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவிகளுக்கு பாதுகாப்பு; புதிய உத்திகளை கையாளுங்க; திருமா அறிவுரை

மாணவிகளுக்கு பாதுகாப்பு; புதிய உத்திகளை கையாளுங்க; திருமா அறிவுரை

சென்னை: 'கல்லூரி, பள்ளி மற்றும் பல்கலை., வளாகத்தில் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க, தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். புதிய உத்திகளை கையாள வேண்டும்' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அண்ணா பல்கலையில் மாணவிக்கு நேர்ந்த நிகழ்வு அதிர்ச்சியை தருகிறது. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டது ஆறுதல் அளிக்கிறது. கல்லூரி, பள்ளி மற்றும் பல்கலை., வளாகத்தில் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க, தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். புதிய உத்திகளை கையாள வேண்டும். அதற்கான ஒரு வழிகளை காணுகிற வாய்ப்பை இந்த குற்ற சம்பவம் உருவாக்கி தந்து இருக்கிறது. ஆகையால், இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்தி உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வழிகாட்ட வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ.,வினர் எதிர்க்கட்சியினர் என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அம்பேத்கர் மீது அவர்கள் மனதில் எவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்று உரை மூலம் அமித்ஷா வெளிப்படுத்தி இருக்கிறார். உரிய நேரத்தில் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Raj S
டிச 26, 2024 23:55

பல்லு படாம செய்யறாப்லயாமா... நீயும்தாண் இந்த விடியா அரசோடு இருக்க... அம்பேத்காருக்கும் இவனுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது...


நிக்கோல்தாம்சன்
டிச 26, 2024 21:05

சிதம்பரத்தில் ஒரு குடும்பத்தின் பெண்களையே கடற்கரையில் போதையில் அசிங்கமா தொட்டு துன்புறுத்திய மிருகங்களை பற்றி ஊடகங்கள் பேசவே மாட்டேங்குதே , ஓஹோ அது உன்னோட தொகுதிதானே ?


sankaranarayanan
டிச 26, 2024 20:47

ஆதவ் அர்ஜுனனை இழந்து துறந்து வெளியே தள்ளி இப்போது அவதிப்படுகிறீர் காலம்தாழ்ந்து புலம்பி என்ன பயன் இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிக்காக அழுதுகொண்டிருக்கிறீர்.


Saravanan
டிச 26, 2024 19:15

இங்கேயும் அம்பேத்கரா


sankaranarayanan
டிச 26, 2024 18:39

நேரம் காலம் தெரியாமல் இவர் புலம்புகிறார் எதை எப்போது சொல்லவேண்டுமா அதைச்சொன்னால் நன்றாகவே இருக்கும் ரோம் நகரமே பத்திகிட்டு எரியும் போது மன்னர் பிடில் வாசித்ததைப்போன்று உபமான உபமேயா.இந்த தருணத்தில் இது போன்ற சொற்கள் உகந்ததா.உண்மையில் அவருக்கு ஆட்சியின் மீது அவருக்கு மனதில் எவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்று உரை மூலம் அமித்ஷாவைக் காட்டி வெளிப்படுத்தி இருக்கிறார். உரிய நேரத்தில் அவர்களுக்கு மக்கள் பாடம் புகற்றுவார்கள்.


SUBRAMANIAN P
டிச 26, 2024 17:41

அது என்ன உத்தி? நீர்தான் சொல்லுமே, சப்பட்டை. இதெல்லா அரசியல்வியாதிகள்.. ஒழிச்சிக்கட்டவேண்டியவிஷயங்கள்


Bala
டிச 26, 2024 17:10

மயிலிறகுல வறுடியது போருண்டா. இதே வேற கட்சி ஆட்சியாக இருந்தால் எப்படி போராடியிருப்ப. வெட்கமாயில்ல....


Rajarajan
டிச 26, 2024 17:09

என்ன பாஸ் ? முன்னுக்கு முரணா பேசறீங்க. நீங்க தானே, உங்க கட்சி உறுப்பினர் ஒவ்வொருத்தர் மீதும் குறைந்தபட்சம் எத்தனை FIR இருக்கணும்னு சொன்னீங்க. இப்போ மாத்தி பேசறீங்களே ?? யாரா இருந்தா என்ன ? நெற்றிக்கண் திறப்பினும், குற்றம் குற்றமே. அப்போ இந்த சம்பவத்துக்கு நீங்களும் தார்மீக பொறுப்பு எடுத்துக்கறீங்களா ?? தவறு செய்பவனைவிட, தவறு செய்ய தூண்டுபவருக்கே தண்டனை அதிகம்.


karupanasamy
டிச 26, 2024 17:03

பக்குவமா திறமையா வேலைபாக்குறான்


சம்பா
டிச 26, 2024 16:51

மெண்டலாகிட்டாப் படி தெரியுது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை