உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

காஞ்சிபுரம்: சாம்சங் தொழிற்சாலையில் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நிரந்தரம் மற்று ஒப்பந்தம் என்ற அடிப்படையில் 3000க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். ஆலையில் தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என்று 36 நாட்கள் போராட்டம் நடத்தினர். அரசு நடத்திய பல கட்ட பேச்சுக்கு பின்னர் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர், அண்மையில் கடந்த மாதம் 27ம் தேதி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தின் 3 பேரை ஆலை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மோகன்ராஜ், சிவநேசன், குணசேகரன் ஆகிய 3 பேரும் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் ஆவர்.இதை அறிந்து சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்தில் உள்ள சாம்சங் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆலை நிர்வாகம் விதிகளை மீறி இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Laddoo
பிப் 05, 2025 22:44

நிர்வாகம் இனியும் தாமதம் செய்வது நல்லதல்ல. பெங்களூர் அல்லது ஓசூருக்கு செல்வது நல்லது


visu
பிப் 05, 2025 19:59

ஆமை புகுந்த வீடும் கம்யூனிஸ்ட் புகுந்த நிறுவனமும் உருப்படாது .இதனால்தான் தொழிற்சங்கம் வேண்டாம் என்றார்கள் தொழில் சங்க தலைவர் என்றால் பெரும்பாலும் வேலை செய்யாம மேயர மாட்டை கெடுத்தகதையா மத்தவங்களைம் கெடுப்பாங்க கடைசியா நிறுவனம் மூடப்படும்


sridhar bala
பிப் 05, 2025 19:42

How many employees are going to come to the street. How many familys put into trouble. Followers ensures that they are not going to get job elsewhere if they loose the job from SAMSUNG. No industry will ready take the employees of Samsung. Before joining for the pro and agitation please think about your family and your current life style


GoK
பிப் 05, 2025 19:31

நோக்கியா நிறுவனம் மூடியது போல இதுவும் மூடும். கம்யூனிஸ்டுகள் சீனாவுக்கு உதவி செய்கிறார்கள். இந்த நிறுவனங்கள் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு மாறினால்தான் இவர்களுக்கு அறிவு வரலாம்.


கிருஷ்ணதாஸ்
பிப் 05, 2025 16:44

இன்று வேலை நிறுத்தம்! நாளை நடுத்தெருவில் நிறுத்தம்!!


pv, முத்தூர்
பிப் 05, 2025 16:36

விளங்கவிடாதா கம்யுனிஸ்ட்.


சூரியா
பிப் 05, 2025 15:59

இந்தக் கம்யூனிஸ்டுகளும், ஆமையும் ஒன்று. நுழைந்தால் அந்த இடமே விளங்காது.


m.arunachalam
பிப் 05, 2025 15:02

வேற மாநிலத்திற்கு மாற்றிவிட்டு தான் அடங்குவார்கள் .


D Natarajan
பிப் 05, 2025 12:04

3000 பெயரின் வாழ்க்கை அம்போ. சாம்சங் தொழிற்சாலைக்கு வேட்டு.


Velayutham rajeswaran
பிப் 05, 2025 11:50

இனி இந்த கம்பெனி விரைவில் மூடு விழா காணும் கூடிய விரைவில் தமிழ்நாடு அடுத்த மேற்கு வங்காளம் ஆக மாறும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை