உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் பள்ளி அருகே சுகாதாரக்கேடு:15 நாட்களில் சரிசெய்ய நீதிபதி உத்தவு

பெண்கள் பள்ளி அருகே சுகாதாரக்கேடு:15 நாட்களில் சரிசெய்ய நீதிபதி உத்தவு

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் சட்டவிழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பொது மக்கள் புகாரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஆய்வு செய்து அங்கிருக்கும் சுகாதாரக்கேடுகளை 15 நாளில் சரி செய்ய மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரனுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா உத்தரவிட்டார்.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தலைமை வகித்தார். சார்வு நீதிபதி திரிவேணி முன்னிலை வகித்தார். பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்த மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் பின்புறத்தில் செயல்படும் திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பல ஆண்டுகளாக காம்பவுண்ட் பகுதியில் அப்பகுதியினர் சிறுநீர் கழித்து மக்கள் நடமாடவே முடியாத அளவிற்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை நீதிபதிமுத்துசாரதாவிற்கு புகார் வந்தது. அதனடிப்படையில் நேற்று அவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் ஆய்வு செய்தார். உடனே அங்கிருந்த சுகாதாரக்கேடுகளை 15 நாளில் சரி செய்து அப்பகுதியை துாய்மையாக மாற்றி தொடர்ந்து இதுபோன்று நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரனுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து பள்ளிக்கு சென்று அங்குள்ள மாணவிகள் மத்தியில் சட்டம் சம்பந்தபட்ட கருத்துக்களை பறிமாறினார். திண்டுக்கல்அபிராமி அம்மன் கோயில் பின்புறம் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா ஆய்வு செய்து அங்குள்ள சுகாதாரக்கேடுகளை அகற்ற மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரனுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
அக் 23, 2024 20:44

தமிழகத்தில் பஸ் ஸ்டாண்டு காம்பவுண்டுகள் பல காலமாக சிறுநீர் கழிக்கத்தான் பயன்படுகின்றன. சிறுநீர் கழிக்க என்று கழிவறைகள் இருந்தாலும் மக்கள் அங்கே சென்று சிறுநீர் கழிக்கமாட்டார்கள். ஏன் என்றால் அங்கே கட்டணம் கட்டவேண்டும். ஆகையால் திறந்தவெளியில் காம்பவுண்டுகள் மேல் கழிப்பார்கள் ஒருசில கழிச்சாடை மக்கள்.


rama adhavan
அக் 23, 2024 22:52

பஸ் ஸ்டாண்டகளில் உள்ள கழிவறைகள் மிக மோசம். அங்குள்ளவர்கள் கட்டண கொள்ளை அடிப்பார்கள். கட்டண அறிவிப்பு பலகை, புகார் தொலைபேசி, காண்ட்ராக்டர் பெயர், அவர் தொலைபேசி, கைபேசி எண் எதுவும் இருக்காது. கழிவறை காண்ட்ராக்ட் அனைத்தும் அரசியல் வாதிகளின் பினாமி தான் நடத்துவது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை