மதுரையில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மதுரை: 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரையில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், அரசாணை 152ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை முதல் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 'ஒப்பந்த நிறுவனம் ஊழியர்களுக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதில்லை. பணபலன்களையும் வழங்குவதில்லை. இது தொடர்பாக மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,' என்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் ஒருவர் கூறினார்.