வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கலப்படம் இல்லாம பண்ணுங்க
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வெண்ணெய்க்கு, தமிழகம் முழுவதும் கிராக்கி இருக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகாவுக்கும், இங்கிருந்து வெண்ணெய் மற்றும் நெய் விற்பனைக்கு செல்கிறது.ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம், ஊத்துக்குளி சர்வோதய சங்கம் என, இரண்டு சங்கங்கள் மூலம், மாதம், 10 ஆயிரம் கிலோ வெண்ணெய் மற்றும் 5,000 கிலோ நெய் உற்பத்தி செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது, மாவட்டம் தோறும் இனிப்பு விற்பனை அதிகரிக்கும். அதற்காக, டன் கணக்கில் வெண்ணெய் மற்றும் நெய் ஆர்டர்கள் கொடுப்பது வழக்கம்.''தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஊத்துக்குளிக்கு திருப்திகரமான வெண்ணெய் மற்றும் நெய் ஆர்டர்கள் கிடைத்தன. சென்னை, புதுவை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெண்ணெய் அதிகம் அனுப்பியுள்ளோம்.பண்டிகைக்கால ஆர்டரின் பேரில், சில நாட்களாக, தினமும், 800 கிலோ வெண்ணெய், 250 கிலோ நெய் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.ஆவாரம்பாளையம் சர்வோதய ( வெண்ணெய் உற்பத்தியாளர்கள்) சங்க மேலாளர் ராசு கூறுகையில், ''பண்டிகைகளுக்கு முன்னதாக, ஆர்டர்கள் கூடுதலாக கிடைக்கும். குறிப்பாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு தயாரிப்பாளர்களிடம் இருந்து ஆர்டர்கள் கிடைத்தது.கடந்த 10 நாட்களாக, வெண்ணெய் மற்றும் நெய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு, தீபாவளி ஆர்டர், 20 சதவீதம் அதிகமாக கிடைத்தது. ஒரு கிலோ வெண்ணெய், 520 ரூபாய்க்கும், நெய் 620 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறோம்; விலையும், கிலோவுக்கு 20 ரூபாய் வரை கூடுதலாக கிடைத்துள்ளது,'' என்றார்.
கலப்படம் இல்லாம பண்ணுங்க