உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாத்தூர் அருகே பயங்கரம்! பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 6 பேர் உடல் சிதறி பலி

சாத்தூர் அருகே பயங்கரம்! பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 6 பேர் உடல் சிதறி பலி

சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அப்பையநாயக்கன்பட்டி என்ற பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று(ஜன.4) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8ins9ntd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பட்டாசுகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் பெரும் தீ பற்றிக் கொள்ள, ஆலையில் இருந்த பட்டாசுகள் சரமாரியாக வெடித்து சிதற ஆரம்பித்தன. பெரும் சத்தத்துடன் பட்டாசுகள் நாலாபுறமும் வெடித்துச் சிதறியதில் 4 அறைகள் முற்றிலும் தரைமட்டமாகின. விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களில் 6 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர்.வெடிகள் வெடித்துச் சிதறியதால் பல மீட்டர் தூரத்துக்கு வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், உள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தரைமட்டமான கட்டடங்களில் அதிக உஷ்ணம் காணப்படுவதால், இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பதை கண்டறியும் பணிகளில் சிக்கல் நிலவுகிறது.வெடி விபத்து நிகழ்ந்த போது சம்பந்தப்பட்ட ஆலையில் எத்தனை பேர் பணியில் இருந்தனர் என்பது உறுதியாக தெரியவில்லை. பலர் காணவில்லை என்று அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிவாரணம் அறிவிப்பு

பட்டாசு வெடிவிபத்தை அடுத்து மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் சம்பவ பகுதிக்கு நேரில் சென்றார். விபத்து எப்படி நிகழ்ந்தது, காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்தினார். இதனிடையே வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பலியான 6 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் முகமது சுதினுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

பட்டாசு ஆலை நிவாரணம்

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களின் குடும்பத்திற்கு பட்டாசு ஆலை சார்பில் தலா ரூ.5.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, இறந்தவர்களின் ஈமச்சடங்கிற்காக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

ஏழு பேர் மீது வழக்கு

பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக, சதீஷ்குமார், நிரஞ்சனா தேவி, கணேசன் என்பவர்கள் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள வச்சக்காரப்பட்டி போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

நசி
ஜன 04, 2025 15:53

ஸ்டெர்லைட் ஆலை மாசு பரவலை செய்கிறது ₹40000 கோடிவருமானம் அந்நிய செலவானி இந்தியாவுக்கு ஈட்டு தந்திய ஆலை.இங்குள்ள சதியால் கோர்ட்டுகளின் கீழ் நோக்கு பார1வையால் மூட பட்டது. பட்டாசு ஆலைகள் பல வருடகணக்காக பலரின் வாழ்வை சூறையாடுகிறது..கவர்மெண்ட் இறந்ஊவரர்களுக்கு நிதி வழங்குகிறது..இது ஓரு ஜாதியின்‌பின்புலத்தில் அரசியல் ஆதாயத்தோடு இயங்குகிறது.. ஏன் அரசு பட்டாசுஆலைகளை முழவதுமாக தடை செய்யகூடாது.


Kumar Kumzi
ஜன 04, 2025 15:23

கள்ளக்குறிச்சில கள்ள சாராயம் குடிச்சி செத்து போனவர்க்ஸ்க்ளுக்கு பத்து லட்சம் ஓவா கடுமையைக உழைத்து இறந்தவர்களுக்கு வெறும் 4 லட்சம் ஓவா ...


Subramanian
ஜன 04, 2025 15:13

மிகவும் சோகமான சம்பவம். சம்பந்தபட்ட அதிகாரிகளை கைது செய்து தண்டிக்கவேண்டும். பரிதாபம். ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


R SRINIVASAN
ஜன 04, 2025 14:14

பட்டாசு தொழிலில் கேப் என்ற ஒன்று தயாரிக்கப்படுகிறது. இந்த product-i மொத்தமாக தரையில் தற்போலின்-il கொட்டும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இதேபோல் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உறையும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு பேக் செய்வதற்கு முன்னால் இதற்கு அரசை குறை சொல்வது முட்டாள்தனம். இந்த விபத்துக்கள் தொன்று தொட்டு நடந்து கொண்டிருக்கிறது.


Yaro Oruvan
ஜன 04, 2025 13:28

திராவிஷமே.. இறந்த தொழிலார்கள் வேலைக்கு போகுமுன் கள்ள சாராயம் குடித்துவிட்டு போனால்தான் அவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்குமா? கொழுப்பெடுத்துப்போய் கள்ளச்சாராயம் குடித்து செத்தவனை ஓடிப்போய் பார்த்து புதினஞ்சி லட்சம் கொடுப்பாய்.. குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்து விபத்தில் உடல் சிதறி இறந்த அந்த தொழிலாளி குடும்பத்திற்கு 4 லட்சம்.. அதுலயும் உங்க கழக குண்டர்கள் எம்புட்டு ஆட்டைய போடுவானுவலோ தெரியாது .. தமிழர்களே உஷார் .. தமிழ்நாட்டை குட்டிசுவராக்கும் விஷ செடி தீயமுகாவை வேரோடு அழிக்க வேண்டும்


Moorthy
ஜன 04, 2025 13:08

ஒவ்வொரு வருடமும் இதே மாதிரி சாவுகள். ஸ்டாலின் அரசு என்ன செய்கிறது. பாதுகாப்பு விதிகள் அமல்படுத்துவதில்?


Sudha
ஜன 04, 2025 12:02

ஆழ்ந்த அனுதாபங்கள். உரிய அரசு பாதுகாப்பு விதிகள் அறிவிக்க படும் வரை பட்டாசு தொழிலை நிறுத்தி வைக்க வேண்டும்.


sundarsvpr
ஜன 04, 2025 11:45

பட்டாசுடன் பட்டாசு உரசியதால் தீ விபத்து என்றால் தீபாவளி காலத்தில் வெடிகளை வாங்கி வீட்டில் வைத்து வெடிக்கிறோம். பட்டாசுடன் பட்டாசு உரசினால் விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதனை அரசு மக்களுக்கு விளக்கவேண்டும்.


ஆரூர் ரங்
ஜன 04, 2025 11:41

மாற்றுத் தொழில் வேலைவாய்ப்புக்கு வழி செய்தே ஆக வேண்டும். இன்னும் இவ்வகை இறப்புகள் நிகழாமல் தடுக்க வேண்டும்.


Bala
ஜன 04, 2025 11:24

இந்த கோர சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது . நஷ்டஈடு மட்டும் இதற்கு நிவாரணம் கிடையாது. பொறுப்பானவர்களுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும். இல்லையென்றால் இது தொடரும், அரசு கஜானா காலியாகும்.


சமீபத்திய செய்தி