உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நா.த.க., சார்பில் சவுராஷ்டிரா மாநாடு

 நா.த.க., சார்பில் சவுராஷ்டிரா மாநாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நா.த.க., சார்பில், மதுரையில் 'சவுராஷ்டிரா அரசியல் எழுச்சி மாநாடு' வரும் 28ம் தேதி நடத்தப்படும்' என, அக்கட்சி தெரிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியில், வரும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு நடக்கிறது. இந்நிலையில், மதுரையில், 'சவுராஷ்டிரா அரசியல் எழுச்சி மாநாடு' வரும் 28ம் தேதி நடைபெறும் என நா.த.க., அறிவித்துள்ளது. இதுதவிர, மயிலாடுதுறையில், வரும் ஜன., 3ல் கூட்டம் நடக்கிறது. அதில், தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த பெரியோர்கள் பலருடைய பெயர்களை பெரியார்களாக பட்டியலிட்டு, நா.த.க., தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Madras Madra
டிச 24, 2025 14:47

அடுத்தது கன்னட மாநாடு


Sundar R
டிச 24, 2025 10:22

தமிழனல்லாத ஈவெராவை தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் பெரியார் என்று அழைக்கலாமா? வயதில் பெரிய மனிதர்களாக இருந்தாலும், அவர்கள் நல்லொழுக்கமும், நற்குணங்களும் கூடிய மகோன்னதமான வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் தான் அவர்களை பெரியார் என்று அழைக்க முடியும். தமிழகத்தில் இருந்த நல்லதையெல்லாம் அழித்தவர் ஈவெரா. இரண்டு புரியாத புதிர்கள் கீழே: விபரமறியாத தமிழர்கள் தமிழகத்தில் ஈவெரா வகையறாக்களால் இவ்வளவு கெடுதல்கள் நடந்த பின்பும் ஈவெராவை பெரியார் என்று இன்னுமா கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியவில்லை. தமிழர்கள் ஈவெராவின் தாசாதி தாசர்களான திமுகவை இன்னுமா நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்?


ராமகிருஷ்ணன்
டிச 24, 2025 07:18

சொராஷ்டிர மக்கள் புத்திசாலிகள். இந்த கிறுக்கனிடம் சிக்க மாட்டார்கள். மதுரையில் உள்ள ஓட்டுக்காக வேஷம் போடுகிறார்


Sun
டிச 24, 2025 06:18

மரம், செடி, கொடிய விட்டுட்டாரு மதம், ஜாதின்னு மாநாடு நடத்த வந்துட்டாரு!


SUBBU,MADURAI
டிச 24, 2025 06:18

நான் இப்போது சொல்லப் போகும் ரகசியத்தை கேட்டு என் அறிவார்ந்த திரள்நிதி தம்பிகள் மிரண்டு போய் பயப்படாமல் இருக்க வேண்டும். இவ்வளவு நாட்கள் என் மனதுக்குள்ளே மறைத்து வைத்திருந்த உண்மையை வெளிக் கொணரும் நேரம் வந்து விட்டது! இத்தனை நாட்களாக சீமான் என்ற பெயரில் மாறு வேடத்தில் இருந்த நான்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை