உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் வழக்கு: உச்ச நீதிமன்றம் கேள்வி; டிக்கி அமைப்பையும் சேர்த்து விசாரிக்க உத்தரவு

சவுக்கு சங்கர் வழக்கு: உச்ச நீதிமன்றம் கேள்வி; டிக்கி அமைப்பையும் சேர்த்து விசாரிக்க உத்தரவு

துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாகவும், சி.பி.ஐ., விசாரணை கோரியும் தொடர்ந்த வழக்கில், 'டிக்கி' அமைப்பையும் எதிர்மனுதாரராக சேர்க்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

முக்கிய பங்கு

துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக்கும் நோக்கில், நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள், கருவிகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதுபோல், மத்திய அரசும் 'நமஸ்தே' திட்டத்தை அறிவித்தது. இவற்றில் முறைகேடு நடந்ததாகவும், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் யு டியூபர் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்தார்.அதில், 'திட்டத்தை செயல்படுத்தும் பணியை, 'டிக்கி' எனப்படும் 'தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை' அமைப்புக்கு சட்ட விரோதமாக வழங்கி, கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துஉள்ளது. 'தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகைக்கு முக்கிய பங்கு உள்ளது' என கூறி இருந்தார்.இந்த மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன், நடந்தது. அடுத்த விசாரணை 21க்கு ஒத்தி வைக்கப்பட்டது. விசாரணையின்போது, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்துக்கு உத்தரவிட்டதோடு, 'டிக்கி' நிறுவன இயக்குநர்களில் ஒருவரும் செல்வப்பெருந்தகையும் உறவினர் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், விளைவு களை எதிர்கொள்ள நேரிடும்' என நீதிபதிகள் எச்சரித்தனர்.

எதிர்மனுதாரர்

இந்நிலையில், இந்த வழக்கில் தங்கள் தரப்பை சேர்க்காமல் விசாரணை நடைபெறுவதாகவும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் 'டிக்கி' மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி ஏ.ஜி.மாஷி அமர்வு நேற்று விசாரித்தது.அப்போது, தங்களை இந்த வழக்கில் சேர்க்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டதாக, 'டிக்கி' தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, ''சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடைக்கால விடுமுறை கால அமர்வு, இந்த விவகாரத்தை, அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?'' என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பினார்.பின்னர், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'உயர் நீதிமன்றத்தில், மே 21ல் விசாரணை நடைபெறும் நிலையில், இந்த வழக்கில், 'டிக்கி'யை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிடுகிறோம். இதற்கான இடைக்கால மனுவை 'டிக்கி' தாக்கல் செய்யலாம். இந்த வழக்கின் மற்ற விவகாரங்களில் இப்போதைக்கு உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. உயர் நீதிமன்றமே வழக்கை விசாரித்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, உத்தரவை பிறப்பிக்கலாம்' என தெரிவித்தது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramachandran Muthaiah
மே 23, 2025 17:45

சில சமயம் நீதிமன்றங்களும் தவறிழைக்கின்றன.


நிவேதா
ஜூன் 17, 2025 10:52

பல சமயங்களில். பணக்காரர்கள் அல்லது செல்வாக்கானவர்ளை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர்ந்தால் அந்த மனுதாரரின் வக்கீலே விலை போகின்றார். அரசு வக்கீல்கள் செல்வாக்கு உள்ளவர்களிடம் விலை போகின்றனர். சாமானியனால் பல சமயங்களில் நீதியை பெற முடிவதில்லை. என்று நீதிபதிகளும் தங்கள் தவறான தீர்ப்புகளுக்கு சட்டத்தால் தண்டிக்க படுகிறார்களோ அதுவரை பெரிய மாற்றங்கள் நிகழாது


ராஜ்
மே 20, 2025 19:49

பொன்முடி மற்றும் அசோக் குமார் வழக்குகளை அவசரமாக விசாரிக்கவில்லையா.


அப்பாவி
மே 20, 2025 13:56

என்னா இருக்கும்?


ஆரூர் ரங்
மே 20, 2025 10:56

(முதல்வர் சம்பந்தப்பட்ட?)ஊழல் வழக்கை உயர்நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிப்பது தவறா? இப்படிப்பட்ட தலைமை நீதிபதி எப்படி ஊழல் வழக்குகளை கையாளுவார்?


Shanmuganathan CA
மே 20, 2025 06:33

இந்த சங்கர் என்ன "ட்ராபிக் ராமசாமி - 2" வா?


நல்லவன்
மே 20, 2025 12:57

ஐயா, traffic ராமசாமி அவர்கள் மிகவும் நேர்மையானவர். சவுக்கு சங்கருடன் ஒப்பிட வேண்டாம் ...


V Venkatachalam
மே 20, 2025 14:04

நல்லவன் கருத்தை ஆட்சேபிக்கிறேன். டிராபிக் கடைசியில் டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டு உலக மகா ஊழல் கட்டுமரம் கருணாநிதியுடன் சேர்ந்ததால், தான் சம்பாதித்த நற்பெயர் அத்தனையும் போயே போச்சு.


நிவேதா
ஜூன் 17, 2025 07:48

ஒரு வழக்கை உயர்நீதி மன்றம் அல்லது உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நடத்த ஆகும் செலவு மிக அதிகம். ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த அனைத்து வழக்குகளும் பொதுநல வழக்குகளே, ஆகவே இந்த தீர்ப்புகள் மூலம் நேரடியாக பண இழப்பீடு ராமசாமிக்கு கிடைக்காது. ட்ராபிக் ராமசாமிக்கு எந்த வகையில் இவ்வளவு பணம் வந்தது இத்தனை வழக்குகளை நடத்துவதுக்கு என்பது எட்டாவது அதிசயமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை