உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புழல் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை

புழல் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை

சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், புழல் சிறையில் இருந்து இன்று ஜாமினில் விடுதலையானார்.பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் மீது அவதுாறு பரப்பியதாக கடந்தாண்டு தமிழகத்தின் வெவ்வேறு ஸ்டேஷன்களில் வழக்குகள் பதியப்பட்டன. குண்டர் சட்டமும் அவர் மீது பாய்ந்தது. ஒரு முறை குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு முறை குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.இத்தகைய பின்னணியில், அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. குண்டர் சட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு விசாரிக்கும் வழக்கு குறித்து, தவறான தகவல்களை பரப்பியதாக அளித்த புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சவுக்கு சங்கரை டிச.,24ல் கைது செய்தனர்.அவரது ஜாமின் மனுக்கள் கீழமை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் ஜாமின் கோரிய மனு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, ஜன.,17ம் தேதியன்று ஜாமின் வழங்கியதுடன், போலீசாருக்கு கண்டனமும் தெரிவித்தார்.அவரது தீர்ப்பில், 'ஜனநாயகம் என்பது முழுக்க முழுக்க கருத்துக்கள் அடங்கியது. அவற்றில் உள்ளடக்கம் உள்ளவை மட்டுமே நிலைத்து நிற்கும். ஒரு கருத்து ஆதாரமற்றதாக இருந்தால், அது நீண்ட காலத்திற்கு நீடிக்காது. ஒரு கருத்தை சொன்னதற்காக, ஒருவர் மீது வழக்கு தொடுப்பது, பாசிச அணுகுமுறையாகும்.'வழக்கு தொடுப்பது வேறு; கைது செய்வது வேறு என்பதை, உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெரிவித்துள்ளது. காவல் துறையினர் தேவையற்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது' என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.இந்நிலையில், கோர்ட்டில் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பித்தல் தொடர்பான தொழில்நுட்ப ரீதியான காரணங்களால், அவரது விடுதலை தாமதம் ஆனது.இதையடுத்து இன்று ஜாமின் உத்தரவில் மாறுதல் செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். 'இந்த உத்தரவு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட உடன், சிறை அதிகாரிகள் மனுதாரரை விடுதலை செய்ய வேண்டும். சான்றளிக்கப்பட்ட நகலின் வருகைக்காக காத்திருக்க தேவையில்லை' என்று நீதிபதி உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில், இன்று மாலை சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

கோமாளி
ஜன 21, 2025 03:01

அரசியல் விமர்சகர் தானே?? அதென்ன யூ டியூபர்??


G Mahalingam
ஜன 20, 2025 21:56

அடுத்த ஆட்சி வந்தால் திமுக பெரும் தலைவர்கள் சிறை செல்லுவார்கள். புகார் கொடுத்த உடனடியாக கைது செய்ய வேண்டும். முதலில் உதயநிதியை கைது செய்வார்கள்.


Raja
ஜன 20, 2025 21:09

இன்னுமாடா உள்ள வச்சுருக்கீங்க இதுதான் ஜனநாயகமாடா. இதுக்கு பேரு அதிகாரநாயகம்டா.


Palanisamy Sekar
ஜன 20, 2025 20:09

மிசா காலத்து நினைவுகளை ஸ்டாலின் மறந்துபோனார் போல. ம்ம் என்றால் சிறைவாசம் ஹூஹூம் என்றால் வனவாசம் என்பதை வசதியாக மறந்து மன்னரை போல தன்னை எண்ணிக்கொண்டு தன்னை விமர்சிப்பவர்களையெல்லாம் சிறைக்கு அனுப்புவது என்பது தான் கோர்ட்டாரின் கண்டனம். இதே நிலைமை அவரை சார்ந்தோருக்கும் அடுத்த ஆட்சி மாறுதலில் காணும்போது அதன் வலியை உணர்வார் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத சங்கரை மீண்டும் மீண்டும் மீண்டும் கைது செய்வதோடு நில்லாமல் குண்டர் சட்டத்தை காட்டி பயமுறுத்துவது சிறுபிள்ளைத்தனமானது. கோர்ட்டாரில் நல்லோரும் இருப்பதால் சங்கர் போன்றோருக்கு ஜாமீன் கிடைத்துவிடுகின்றது. ஆனால் அங்கே உள்ள கீழமை நீதிமன்றம் திமுக அலுவலகம் போல செயல்படுவதை போல இருபப்து நீதித்துறைக்கே களங்கம்தான். சங்கரின் பணி இன்னும் உக்கிரமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இனி ஸ்டாலின் என்ன செய்வார் என்று பார்ப்போமே.


சம்பா
ஜன 20, 2025 19:30

பொது மக்கள் ஆதரவு இருக்கு ஆனால் பத்திரிகைகள் மவுனம் துணிச்சலலுக்கு சங்கர் சுழலட்டும் வேகமாக (சாட்டை )


Kasimani Baskaran
ஜன 20, 2025 18:47

என்னை கிள்ளினார் , முள்ளினார், கடித்தார் என்று நாலு அடிப்பொடிகள் புகார் கொடுக்க தயாராக இருப்பார்கள். உடனே ஏவல்துறையும் நாலு பீடாக்களை காட்டி உள்ளே தூக்கி வைத்து காமடி செய்யும். நீதிமன்றம் சிறை என்று சவுக்கர் பொழுதைக்கழிப்பார்.


Raja
ஜன 20, 2025 18:43

அநீதிக்கு எதிரான சிங்கம் சங்கர் அவர்களே வருக... வருக...


கில்லி
ஜன 20, 2025 18:41

தலைவன் வந்துட்டான் .


murthy c k
ஜன 20, 2025 18:34

சவுக்கு சங்கர் சவுக்கை சுழட்ட வேண்டும் உடனடியாக


முக்கிய வீடியோ