உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சத்துணவு சாப்பிட்ட பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்; திருவாரூரில் 39 பேர் அட்மிட்

சத்துணவு சாப்பிட்ட பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்; திருவாரூரில் 39 பேர் அட்மிட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கொண்டைக்கடலையுடன் சத்துணவு சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள் 39 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். திருவாரூர் அருகே உள்ளது தென்னவராயநல்லூர். இங்கு அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இன்று மதியம் பள்ளிக் குழந்தைகளுக்கு கொண்டைக்கடலையுடன் சத்துணவு வழங்கப்பட்டது. மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ மாணவியர் மூன்று பேருக்கு வாந்தி ஏற்பட்டது. பல மாணவ மாணவியருக்கு மயக்கமும் ஏற்பட்டது. பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 39 பேர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைவரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். சிகிச்சை பெரும் மாணவ மாணவியரை கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டார். உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இன்று மதியம் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ மாணவியர் அனைவரையும் மருத்துவமனையில் சேர்க்கவும் உரிய சிகிச்சை அளிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

M R Radha
மார் 19, 2025 16:27

கர்நாடகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு எப்படி பரிமாறப்படுகிறது என்று அமைச்சர்களுக்கு சொல்லவும்


M R Radha
மார் 19, 2025 16:21

இஸ்கான் உணவுக்கு ஏற்பாடு செய்ங்க


अप्पावी
மார் 19, 2025 15:54

ஓசில சோறு போடுவதெல்லாம் நாட்டுக்கு கேடு. தேவையில்லாத ஆணி. அரை சோம்பேறிகளை முழு சோம்பேறிகளாக்கும் முயற்சி. தலை முறை தலைமுறையா ஏழைங்களை ஏழைகளாகவே வெச்சிருக்கீங்களே... உங்களையெல்லாம்.....


Venugopal, S
மார் 19, 2025 08:17

அமரிக்கா லண்டன் கனடா அங்க எல்லாம் இந்த மாடல் தான் அப்டின்னு தம்பட்டம் அடித்தனர். துருப்பிடித்த மாடல்


D.Ambujavalli
மார் 19, 2025 05:49

எந்த உ. பி. அல்லது அமைச்சரின் பினாமிஸ், உற்றார் உறவுக்கு supply contract கிடைத்ததோ புழுத்தது, கெட்டுப்போனதையெல்லாம் ஏழை குழந்தைகளுக்கு திணித்து விளையாடி இருக்கிறார்கள். ஏழை அரசுப்பள்ளி மாணவர்கள்தானே , உயிர் அவர்களுக்கு கிள்ளுக்கீரைதானே


Kasimani Baskaran
மார் 19, 2025 04:00

சுகாதாரமாக சமைக்க பயிற்சி கொடுப்பது கூட முடியாது - கேவலமான நிர்வாகம்.


Priyan Vadanad
மார் 19, 2025 01:00

மாணவ மாணவியரின் நலன் கருதி எல்லா சத்துணவு மய்யங்களின் முன்னாள் நின்று மயிலிறகு சாட்டையால் பளார் பளார் என்று அடுத்தவர் முதுகில் சாத்து சாத்து என்று சாத்தி காமெடி செய்து எல்லோரையும் சிரிக்க வைக்கும் போராட்ட அறிவிப்பு சீக்கிரம் வெளியாகும். கருத்துக்களே தயாராகுங்கள்.


Jagannathan Narayanan
மார் 19, 2025 06:51

யோசித்து பேசவும்.. ஒரே அடியாக முட்டு குடுக்க வேண்டாம்.


Priyan Vadanad
மார் 19, 2025 00:54

மலையாரின் போராட்டம் தொடர்கிறது. இப்போது சத்துணவும் மையங்களுக்கு முன்னால் ஒற்றைக்கால் செருப்புடன் நடக்கும் போராட்டத்துக்கான அறிவிப்பு இரண்டொரு நாளில் ரிலீசாகிறது. கருத்து கண்மணிகள் அங்கெல்லாம் போகாமல் கருத்து திராவிட மாடல், மூர்க்கன்ஸ், பாவாடை என்று மட்டும் போடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Kumar Kumzi
மார் 19, 2025 00:23

மண்டையிலும் சரக்கு இல்லை துண்டுசீட்டையையும் வாசித்து புரிந்துகொள்ள தெரியாது மொத்தத்துல கூமுட்ட கூடாரத்தின் தலீவன் இது தான் ஓங்கோல் விடியலின் திராவிஷ மாடல் ஆட்சி


Oru Indiyan
மார் 18, 2025 23:52

செத்தா என்ன. ஆளுக்கு ரூ 2 லட்சம் கொடுத்து விட்டு ஒரு போட்டோ ஷூட் எடுத்தால் போச்சு. அந்த போட்டோவை 2026 தேர்தலுக்கு ஒரு சாதனையாக பட்டியலிடலாம்... தாயுமானவர்...அப்பா...


புதிய வீடியோ