சென்னை : அரசு, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், பல்வேறு நிலைகளில், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களின் சுயவிபரங்கள், பள்ளிக் கல்வி துறை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககம், ஆசிரியர் தேர்வு வாரியம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் உள்ளிட்டவற்றின் வாயிலாக, ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில், பெரும்பாலானோர் தங்களின் பிறந்த தே தி, வயது, ஓய்வுபெறும் தேதி, மொபைல் போன் எண் உள்ளிட்டவற்றை தவறாக பதிவிட்டுள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு சரியான பணிப்பதிவேடு, ஆவணங்களை தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புதிதாக படிவம் வழங்கி, விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அந்த படிவத்தில் கேட்கப்பட்டபடி, உண்மையான தகவல்களை நிரப்பி, வரும் 12ம் தேதிக்குள், a3sec.gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, பணியாளர்களுக்கு பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.