உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழைக்காலத்தில் பள்ளிக்கு விடுமுறை; யார் முடிவு எடுக்கலாம்: அமைச்சர் பதில் இதுதான்!

மழைக்காலத்தில் பள்ளிக்கு விடுமுறை; யார் முடிவு எடுக்கலாம்: அமைச்சர் பதில் இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களே முடிவு எடுக்கலாம். அவர்கள் சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியிடுவார்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.கோவை கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர் மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:வடகிழக்கு பருவமழை தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆய்வு நடத்தி கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு இடங்களிலும் அதிகமான மழை பெய்யும் போது, இன்று பள்ளி செயல்படுமா? விடுமுறையா? என கேள்வி கேட்கப்படுகிறது. மழை எந்த மாவட்டத்தில் அதிகமாக பெய்தாலும் சரி, அந்த மாவட்ட கலெக்டர் பள்ளி செயல்படுமா என்பது குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள். மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களே முடிவு எடுக்கலாம். மாணவர்களின் கவனம் படிப்பில் இருக்க வேண்டும். மாணவர்கள் எந்தவித பதற்றமும் இன்றி, சந்தேகங்களுக்கு ஆசிரியரிடம் தெளிவு பெற்று, பொதுத்தேர்வை எழுத வேண்டும்.மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அழுத்தம் தருகின்றனர். மத்திய அரசின் கட்டளைகளை ஏற்றால், மட்டுமே நிதி ஒதுக்குவோம் எனக் கூறுவதை ஏற்க முடியாது. நன்றாக செயல்படும் தமிழகம் போன்ற மாநிலங்களிடம் ஆரோக்கியமான அணுகுமுறையில் நடக்க வேண்டும். மத்திய அரசு கொடுக்கவில்லை என்றாலும், தமிழக அரசின் சொந்த நிதியை பயன்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

நிக்கோல்தாம்சன்
அக் 14, 2024 20:17

ஆய்வு செய்யும் அளவுக்கு ஒரு சிலருக்கு படிப்பு , அனுபவம் இருக்கா ? என்று யாராவது கேட்டுட்டு போறாங்க


தத்வமசி
அக் 14, 2024 20:00

மும்மொழிக் கொள்கையை ஏற்றால் வானம் இடிந்து கீழே விழாது. காலத்திற்கு ஏற்றார் போல மாறுதல்கள் செய்ய வேண்டும். இதனால் கவுரம் குறையாது. மாறாக மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் இன்னொரு மொழியைப் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு மொழியை ஆதரிப்பவர்களுக்கு இந்திய மொழியை ஆதரிப்பதில் என்ன தயக்கம் ? இதில் அரசியல் எதற்கு ?


SUBRAMANIAN P
அக் 14, 2024 17:08

மழைக்காலத்தில் பள்ளிக்கு வரலாமா வேண்டாமா என்பதை மாணவர்களே தீர்மானம் செய்துகொள்ளலாம். தேவைப்பட்டால் நண்பர்களிடம் ஆலோசனை பெறலாம். ஆனால் எப்படியாவது, எப் ப டி யாவது பாஸாகிவிடவேண்டும்.. அம்புடுதேன். நல்ல அமைச்சர்.


Jysenn
அக் 14, 2024 14:54

இந்த படத்தை பார்த்தல் பயமாக இருக்கிறது . குழந்தைகள் பயந்து அழுகின்றனர் .


kulandai kannan
அக் 14, 2024 14:12

உதயநிதி மற்றும் அன்பில் மகேஸ் இலாக்காக்களை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது.


Narayanan Sa
அக் 14, 2024 14:09

நல்லா ஆசிரியர்கள் இருந்தால் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெறலாம். ஆசிரியர்கள் இல்லாவிட்டால் அமைச்சரிடம் லஞ்சம் கொடுத்து விட்டால் தேர்ச்சி பெற்று vidalaam


Barakat Ali
அக் 14, 2024 13:53

கோவை அன்னூர் அருகே உள்ளது ஒன்னக்கரசம்பாளையம் கிராமம். இங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின்வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அன்னூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் மரம் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. அதில் ஒரு மின்கம்பி 90 சதவிகிதம் அறுந்து எப்போது வேண்டுமானாலும் தரையில் விழும் நிலையில் உள்ளது. இது குறித்து ஒன்னக்கரசம்பாளையம் கிராம மக்கள் பொகலூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் காதில் வாங்கி கொள்ளவில்லை என்கின்றனர் ஊர் மக்கள்.


Barakat Ali
அக் 14, 2024 13:29

மழைவெள்ளத்தை முன்னிட்டு மாவட்டப்பள்ளிகளுக்கான விடுமுறையை அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவெடுக்கும் நடைமுறை காலங்காலமாக இருக்கே பாசு ?


R S BALA
அக் 14, 2024 13:15

அப்போ மழை லீவுக்கு வாய்ப்பில்ல ராஜா..


Ramesh Sargam
அக் 14, 2024 12:47

ஆனால் மழைக்காலங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், மற்றும் பள்ளி சிப்பந்திகள் பாதுகாப்பை அரசுதான் கவனிக்கவேண்டும்.


புதிய வீடியோ