உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பள்ளி நிலத்தை கல்வியை தவிர வேறு நோக்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது

 பள்ளி நிலத்தை கல்வியை தவிர வேறு நோக்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'எதிர்காலத்தில் கல்வி நோக்கத்தைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பள்ளியின் காலி நிலத்தை பயன்படுத்தக் கூடாது,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. துாத்துக்குடி மாவட்டம் சிறுத்தொண்டநல்லுார் அரவிந்த் தாக்கல் செய்த மனு: சிறுத்தொண்ட நல்லுாரில் முத்துமாலையம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 5 ஏக்கர் பரப்பில் விளையாட்டு மைதானம் உள்ளது. அதில் வேறு எந்த கட்டடமும் கட்டாமல் மைதானமாகவே பாதுகாக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அஸ்வின் ராஜசிம்மன் ஆஜரானார். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான்: மக்கள் தானமாக வழங்கிய 8.67 ஏக்கரில் பள்ளி அமைந்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் நலனிற்காக, அவ்வளாகத்தில் தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.,) மற்றும் பல்நோக்கு மையம் அமைக்கப்படும். இம்மையம் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் தர பயன்படுத்தப்படும். மற்ற நேரங்களில் அது வகுப்பறையாக பயன்படுத்தப்படும். இரு கட்டடங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதி வெவ்வேறு சர்வே எண்களில் உள்ளது. புது கட்டடத்தால் விளையாட்டு மைதானத்தின் பரப்பளவு குறையாது என்றார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வரைபடத்தின்படி தற்போதுள்ள விளையாட்டு மைதான பகுதியை ஐ.டி.ஐ.,மற்றும் தங்குமிடம் அமைப்பதற்கான கட்டுமானத்திற்காக எடுத்துக்கொள்ளப்படவில்லை. விளையாட்டு மைதான பகுதி வேறு எந்த நோக்கத்திற்காகவும் எப்போதும் பயன் படுத்தப்படாது என அரசு தரப்பில் அளித்த உத்தரவாதத்தை பதிவு செய்கிறோம். எதிர் காலத்தில் கல்வி நோக்கத்தைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பள்ளியின் காலி நிலத்தை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தத்வமசி
டிச 31, 2025 10:11

சரியான கருத்து என்றே கூறலாம். ஆனால் மக்களின் வரிப்பணத்தை வைத்து தனது தேர்தல் பரப்புரையாக பயன்படுத்தி தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இலவசங்களை தனது கட்சிக்காரர்களாக பார்த்து ஓட்டுக்காக அள்ளி வீசும் அரசினை ஏன் குறை கூறவில்லை ?


GMM
டிச 31, 2025 09:51

விளையாட்டு மைதான பகுதி வேறு எந்த நோக்கத்திற்காகவும் எப்போதும் பயன் படுத்தப்படாது என திமுக கட்சி தமிழக நிர்வாகம் தரப்பில் அளித்த உத்தரவாதம் உறுதி செய்ய அண்ணா அறிவாலயம் அல்லது உத்தரவாத நபர் சொத்து ஈடாக பெற வேண்டும். நிர்வாக வழக்கு அதிகம் எடுக்கும் போது, அதிகாரிகள் சம்பளம் பாதியாக குறைக்க வேண்டும். ஒரே வேலையை ஏன் இருவர் செய்ய வேண்டும்?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 31, 2025 08:59

பள்ளி நிலத்தை திமுக பயன்படுத்தியதில்லையா


ram
டிச 31, 2025 07:44

நம்ம தீம்காக்கு இதுதானே கூட்டம் Free யா நடத்த சிறந்த இடம்.. இதுலே கை வைக்கிரீங்களே..


sankaranarayanan
டிச 31, 2025 06:53

மயிலை கோயில் நிலமான லயோலா கல்லூரி விளையாட்டு மனிதத்தை திரும்ப கோயிலுக்கே கொடுப்பார்களா இல்லை நீதிமன்றம்தான் போய் வழக்காடி பெற வேண்டுமா எப்போது இது நடக்கும்


Vasan
டிச 31, 2025 10:30

அந்த ஹிந்து கோவில் நிலம், கிறிஸ்துவ லயோலா கல்லூரிக்கு தானமாக அளிக்கப்பட்டது என்று சொல்கிறார்களே.


தத்வமசி
டிச 31, 2025 14:29

திராவிடம் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் வரை இவை தொடர்ந்து நடக்கும். உபி போல மண்ணின் மைந்தன் முதல்வராக வந்தால் எல்லாம் சரியாக நடக்கும்.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 31, 2025 06:41

எது கல்வி? கல்வி என்பது வெறும் புத்தக அறிவையோ அல்லது ஒரு பட்டத்தையோ பெறுவது மட்டுமல்ல. இருட்டில் இருப்பவனுக்கு ஒரு விளக்கு எப்படி வழிகாட்டுமோ, அதுபோல அறியாமை என்னும் இருளில் இருப்பவனுக்கு அறிவு என்னும் ஒளியைத் தருவதுதான் கல்வி. உலகைப் பற்றிய புரிதலையும், பகுத்தறியும் திறனையும் வழங்குவது கல்வி.


vivek
டிச 31, 2025 07:50

கல்வியையும், உலக அறிவை பெற்றும் சில பேர் இன்னும் திராவிட மாயையில் இருப்பது ஏனோ...புரிந்தால் சரி


vivek
டிச 31, 2025 07:52

ஓப்பனிங் எல்லாம் நல்லதான் இருக்கு...ஆனா பிணிசிங் சரி இல்லையே


Svs Yaadum oore
டிச 31, 2025 08:06

கல்வி என்பது திராவிட கல்வி ....பரீட்சை எழுதாமலேயே திராவிட பாஸ் போடலாம் ....காசுக்கு டிகிரி கரோனா டிகிரி ஓசியில் டிகிரி என்று பல பட்டங்கள் டிகிரிகள் திராவிட கல்வியில் வழங்கப்படும் ...


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 31, 2025 09:01

சமச்சீர் எடுபிடிகளெல்லாம் கல்வி பத்தி லெக்ச்சர் அடிக்குது .... கெரகம் .... கெரகம் ....


vivek
டிச 31, 2025 09:59

உண்மை உண்மை சார்...சாத்தான் வேதம் ஓதுகிறது என்று கூட சொல்லலாம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை