உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகளுக்கு பாதுகாப்பு இல்லை: பன்னீர்செல்வம் ஆவேசம்

பள்ளிகளுக்கு பாதுகாப்பு இல்லை: பன்னீர்செல்வம் ஆவேசம்

சென்னை : 'தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு பாதுகாப்பு இல்லை' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, காமநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வகுப்பறையில், மனிதக் கழிவுகளை வீசும் அளவுக்கு, அவலம் நடந்துள்ளது.இது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.காமநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், இரவு காவலர்கள் யாரும் இல்லை. சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருப்பதால், இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில், சிலர் மது அருந்துகின்றனர்.சமூக விரோதிகளின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். காவல் நிலையத்தில் இருந்து, 100 அடி துாரத்தில் உள்ள பள்ளியிலேயே இந்த நிலை என்றால், மற்ற பள்ளிகளின் நிலையை நினைக்கவே பயமாக இருக்கிறது.இந்த அளவுக்கு சட்டம் -- ஒழுங்கு சீரழிந்துள்ளது. வகுப்பறையில் மனித கழிவு வீசியவர்கள், இன்னும் கைது செய்யப்படவில்லை. குற்றங்களை தடுப்பதிலும், குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வழங்குவதிலும், தி.மு.க., அரசு தொடர்ந்து அலட்சியத்துடன் நடந்து வருகிறது. இதை சுட்டிக்காட்டினால், சிந்தனை குறைபாடு என்று முதல்வர் விமர்சனம் செய்கிறார். இனியாவது சட்டம்-- ஒழுங்கை காக்க, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை