உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறிவியல் ஆசிரியர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

அறிவியல் ஆசிரியர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை:அறிவியல் ஆசிரியர்களின் விலை மதிப்பற்ற பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, அறிவியல் நகரம், 2018 முதல், சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அதன்படி, 2024 - 25ம் ஆண்டுக்கான விருதுக்கு, தமிழகத்தில் உள்ள உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி அளவில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், அறிவியல் ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், புவியியல், வேளாண் நடைமுறைகள் போன்ற துறைகளில் இருந்து விண்ணப்பிக்கலாம். அறிவியல் நகரத்தால் பத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை, http://www.sciencecitychennai.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டிசம்பர், 23 தேதிக்கு முன், அறிவியல் நகர அலுவலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை