ஹோட்டல் அதிபர் வீடுகளில் சோதனை
சென்னை:சில பண பரிவர்த்தனைகள் சந்தேகப் படும்படி இருந்ததால், 'அமராவதி ரெஸ்டாரென்ட்' உரிமையாளர்கள் வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரி கள் சோதனை நடத்தினர். சென்னை, ஆழ்வார்பேட்டை, 'மியூசிங் அகாடமி' எதிரே, அமராவதி ரெஸ்டாரென்ட் உள்ளது. இதன் உரிமையாளர்களான நைனா ரெட்டி, அல்லாரெட்டி தருண் ரெட்டி மற்றும் நிவ்ருதி ரெட்டி ஆகியோரின் வீடுகள், ஆழ்வார்பேட்டை மகாதேவன் அடுக்குமாடி குடியிருப்பில், இரண்டாவது தளத்தில் உள்ளன. இவர்களின் வங்கி கணக்குகளில், சில பண பரிவர்த்தனைகள் சந்தேகப்படும்படி இருப்பதாக கூறப்படுகிறது. தொழில் அதிபர்களான நைனா ரெட்டி உள்ளிட்டோர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்பதால், அவர்களின் வீடுகளில் நேற்று, அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.