உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார் ரேஸ் நடப்பதற்கு காரணம் சொல்கிறார் சீமான்; கேட்டுக்கங்க மக்களே!

கார் ரேஸ் நடப்பதற்கு காரணம் சொல்கிறார் சீமான்; கேட்டுக்கங்க மக்களே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இத்தனை எதிர்ப்புக்கு பிறகும், சென்னையில் கார் ரேஸ் நடப்பதற்கு அதிகாரத்திமிர் தான் காரணம்,' என்று சென்னையில் நடந்த நுால் வெளியீட்டு விழாவில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.சென்னையில் நடந்த நூல்கள் வெளியீட்டு விழா சீமான் பேசியதாவது: கார் ரேஸ் நடத்தினால் முதலீடு வரும் என்றால் எதற்காக முதலீட்டுக்கு அமெரிக்கா செல்ல வேண்டும்? இத்தனை எதிர்ப்புக்கு பிறகும் அதிகாரத் திமிரில் கார் ரேஸ் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாம் தனிநாடு கேட்கவில்லை. இதே நாடே என்னுடையது தான். தெற்காசியா முழுமைக்கும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அப்படியென்றால் இந்த நாடே என்னுடையது.

பகைவர் ஓடு!!

பாசிஸ்ட், பிரிவினைவாதி என்று என்னை பார்த்துக் கூறும்போது பெருமை தான் ஏற்படுகிறது. இந்தியா என் நாடு, பாரத நாடே தமிழர் நாடு என்று இனி வரும் தலைமுறையினருக்கு சொல்ல வேண்டும். பாரத நாடு பைந்தமிழர் நாடு. பகைவர் அனைவரும் ஓடு. இந்தியாவை ஹிந்துக்கள் நாடு என்பது சொல்வதை நான் ஏற்க மாட்டேன். இந்த நிலத்தில் தாய்மொழியாக தமிழை கொண்டவர்கள் தான் வாழ்ந்தார்கள். இவ்வாறு சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Kulandaisamy Sevethiyan
செப் 03, 2024 12:32

சீமான் நல்லவர் வல்லவர்


Premanathan Sambandam
செப் 03, 2024 20:33

நம்பிட்டோம்


Kulandaisamy Sevethiyan
செப் 03, 2024 12:30

சீமானின் இந்த அகங்கார பேச்சு எடுபடாது.


Kulandaisamy Sevethiyan
செப் 03, 2024 12:27

அதிகார திமிர் இப்ப சீமானுக்குதான் இருக்கிறது போல அவருடைய பேச்சில் இருந்து தெரிகிறது.


Kulandaisamy Sevethiyan
செப் 03, 2024 12:23

வன்மத்தை மனதில் வைத்து பேசும் சீமான் முன்னேறவேமுடியாது. அதிகார திமிர் இப்ப சீமானுக்குதான் இருக்கிறது போல அவருடைய பேச்சில் இருந்து தெரியுது.


தமிழன்
செப் 01, 2024 22:09

வரலாறு தெரிந்து கொள்ளுங்கள்..////1728 ஜூன் 25 இல், முகலாய பேரரசர் ஜஹந்தர் ஷாவின் மகனான "ஷாஜாதா" இளவரசர் அசீஸ்-உத்-தின் என்பவருக்கு அலி கவுஹர் பிறந்தார். இவரது தந்தை பேரரசராக மாறியதன் மூலம் இவர் ஒரு கௌரவமான இளவரசனாக பதிவு செய்யப்படவில்லை, ஆகவே இவரது தந்தையின் ஆட்சியின் போக்கில் இயற்கையாக நியமிக்கப்பட்டார். இவரது தந்தையின் இணைப்பில், இவர் பேரரசின் "வலி ஆத்" அரச இளவரசர் ஆனார். ஆனால் வஜீர் இமாத்-உல்-முல்க் என்பவர் கையில் கிட்டத்தட்ட அனைத்து அதிகாரமும் இருந்தது. ஷா ஆலம் ஆப்கானிஸ்தானின் அமீர் அகமது ஷா அப்தாலியால் பல ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டார். இது மராத்திய சாம்ராஜ்ஜியத்திற்கு இடையே மூன்றாவது பானிபட் போருக்கு வழிவகுத்தது, தில்லி மற்றும் முகலாய விவகாரங்களை அப்துல்லா தலைமையிலான ஆப்கானியர்கள் பாதுகாத்து வந்தனர். 1760 ஆம் ஆண்டில் அப்தலியின் ஆக்கிரமிப்பு படைகள் சதாசிவராவ் பாவ் தலைமையிலான மராத்தியர்களால் விரட்டியடிக்கப்பட்டன, இவர் மூன்றாம் ஷாஜஹானை, மூன்றாம் பெரோஸ் ஜங்- ன் கைப்பாவையாக இருந்தார்..///புரிந்தால் மகிழச்சி


தமிழன்
செப் 01, 2024 22:00

பதவிக்காக, உடன் பிறந்தவர்களை, அப்பாவை என சதி செய்தது என எல்லாம் மொகலாய வரலாறு என இந்திய வரலாற்றில் படித்து இருப்போம். அதன் பிறகு மொகலாய சாம்ராஜ்ஜியம் சரிந்தது.. ஆங்கிலேயர் ஆட்சி வந்தது .. நான் வரலாற்றை சொன்னேன். சின்ன வயதில் அடித்தததை நினைவு படுத்தி பாருங்கள்


திராவிட மாடல் மனித நேய மாடல்
செப் 01, 2024 21:55

இவருக்கு கலைஞர் ஐ திட்டினால் தான் வாழ்வு வரும் லைப் தடவை தெரு வில் தான் இவர் ஆளுகை


Murthy
செப் 01, 2024 21:04

தமிழரசனின் புத்தக வெளீட்டு விழா என்று சொல்ல பயம் . ....


தமிழன்
செப் 01, 2024 20:50

அதிகார திமிர் தான் காரணம் என்றால், இனி வருடத்திற்கு இரண்டு கார் ரேஸ் நடத்தலாமே.. ///அடுத்த தேர்தல் அறிக்கையில், இனி ஒவ்வொரு வீட்டு மொட்டை மாடியிலும் ரேஸ் நடத்தப்படும். ரேஸ் நடத்த விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு குடும்பத்திற்கு ரூபாய் ஆயிரம் தேர்தலுக்கு முன்பாக வரும் அண்ணா பிறந்தநாளின் போது வழங்கப்படும் .. அதற்காக ரேஷன் கடையில் கலைஞர் பிறந்த நாள் முதல் விண்ணப்பம் செய்யலாம். /// அட என்ன யோசிக்கிறீங்க.. இதெல்லாம் வறலாம் என்று கனவு வருகிறதா..


தமிழன்
செப் 01, 2024 20:39

முகலாய சாம்ராஜ்யத்தில், பதவிக்காக சதி செய்தது எல்லாம் வரலாற்றில் நாம் படித்து இருப்போம். முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டும் இந்த வரலாறு எல்லாம் தெரியாமலா இருக்கும் . தம்பி சீமான் கேமிராவை கொஞ்சம் அந்த பக்கம் வைத்து பார்க்க வேண்டும்.