உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மரங்களுக்கான மாநாடு ஏன் திருத்தணியில் சீமான் விளக்கம்

மரங்களுக்கான மாநாடு ஏன் திருத்தணியில் சீமான் விளக்கம்

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த அருங்குளம் கூட்டுச் சாலையில், 'மனித நேய பூங்கா' என்ற மரங்கள் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் ஆக.30ல் மரங்கள் மாநாடு நடத்தப் போவதாக அறிவித்திருக்கும் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த வனப்பகுதியில் மாநாட்டை நடத்தலாமா என்பது குறித்து, நேற்று அந்த பூங்காவை நேரில் பார்வையிட்டார். பின் சீமான் அளித்த பேட்டி: ஆக.30ல், 'மரங்களோடு பேசுவோம்; மரங்களாக பேசுவோம்' என்ற மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளேன். இதற்காக இடம் தேர்வு செய்வதற்காக வந்தேன். 'மரங்கள் நடுவோம்; மழை பெறுவோம்' என தமிழக அரசு வெற்று விளம்பரம் மட்டும் செய்கிறது. ஆனால், மரங்கள் வளர்ப்பதற்காக எதையும் செய்யவில்லை. அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் தங்களுடைய பிறந்த நாளில், 'தொண்டர்களும், ரசிகர்களும் ஆளுக்கு ஒரு மரக்கன்று நடுங்கள்; அதுவே, எங்களுக்கு சொல்லும் பிறந்த நாள் வாழ்த்தாக இருக்கும்' என அறிவிப்பு வெளியிட்டால் போதும். தலைவன் மற்றும் நடிகரின் அன்பை பெறும் நோக்கோடு, ஆளாளுக்கு மரக்கன்று நடுவர். பின், அது வளர்ந்து நாட்டுக்கே நன்மை கொடுக்கும். இப்படி அறிவிப்பு வெளியிட்டிருந்தால், தமிழகத்தில் மட்டும் பல கோடி மரக்கன்றுகள் நட்டு இருக்கலாம். மரக்கன்று நடுவது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே, என் கட்சி சார்பில், மரங்களுக்கான மாநாடு நடத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை