உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ல் விஜய் ஆட்சி பீடத்தில் அமரும் காலம் உருவாகும்: செங்கோட்டையன் நம்பிக்கை

2026ல் விஜய் ஆட்சி பீடத்தில் அமரும் காலம் உருவாகும்: செங்கோட்டையன் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விஜய் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு அரசியல் பணியாற்றி வருகிறார். அவரது பணியை பொறுத்தவரை 2026ல் மக்கள் சக்தியால், ஆட்சி பீடத்தில் அமரும் காலம் உருவாகும் என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: கோபி செல்கிறேன். எங்கள் பகுதிக்கு செல்கிறேன். பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் இருக்கிறது. அதில் கலந்து கொண்டு, அதற்கு பிறகு 1ம் தேதி இங்கே திரும்பி வர இருக்கிறேன். எங்களை பொறுத்தவரை ஒரு கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. எம்ஜிஆர் போல விஜயை நீங்கள் பார்க்கிறீர்களா என்று ஒரு கேள்வி கேட்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4noo3o7l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல் முதலில் எம்ஜிஆர் இயக்கத்தை தொடங்கிய போது, திரைப்படம் போல் 100 நாள் தான் ஓடும் என்று சொன்னார்கள். ஆனால் அவருடைய ஆட்சி என்பது இறுதிவரை அவரை யாராலும் வெல்ல முடியாது. இன்று விஜயை பொறுத்தவரையிலும், எம்ஜிஆர் வழியில் இன்று அவருடைய பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். அவர் வாகனத்தை பொறுத்தரைக்கும் அண்ணாதுரை, எம்ஜிஆர் திருவுருவம் தாங்கிய வாகனத்தில் தான் சென்று கொண்டு இருக்கிறார். எம்ஜிஆர் எந்த வழியில் பயணத்தை மேற்கொண்டாரோ, அந்த வழியில் தான் விஜய் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். விஜய் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு அரசியல் பணியாற்றி வருகிறார். அவரது பணியை பொறுத்தவரை 2026ல் மக்கள் சக்தியால், ஆட்சி பீடத்தில் அமரும் காலம் உருவாகும். அதிமுகவில் இருந்து தவெகவில் இணைபவர்கள் குறித்து இப்போது வெளியே சொன்னால் பிரச்சனை உருவாகும். இவ்வாறு செங்கோட்டையன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி