உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்

அ.தி.மு.க.,வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்

சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க.,வில் இருந்து நேற்று நீக்கப்பட்டார். 'அ.தி.மு.க.,விலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்திய செங்கோட்டையன், அதற்கான நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும் கூறியிருந்தார். அதன் காரணமாக, கட்சி பதவிகளை பறிகொடுத்தார். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த தேவர் குருபூஜையில், பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை, செங்கோட்டையன் சந்தித்தார். பன்னீர், தினகரனுடன் இணைந்து, தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்த செயல், பழனிசாமியை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து, நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில், செங்கோட்டையன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற் கிடையே தனது நீக்கம் குறித்து இன்று விளக்கம் அளிப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை