உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாரும் வாய் திறக்காததால் விரக்தி; ஹரித்துவார் சென்றார் செங்கோட்டையன்

யாரும் வாய் திறக்காததால் விரக்தி; ஹரித்துவார் சென்றார் செங்கோட்டையன்

அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காததால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரக்தி அடைந்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். கடந்த 5ம் தேதி, கோபிசெட்டிப்பாளையத்தில் பேட்டியளித்த செங்கோட்டையன், 'அ.தி.மு.க.,விலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்காவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாது. 'எனவே, பிரிந்து சென்றவர்களை இணைக்கும் பணியை, 10 நாட்களுக்குள் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி துவங்க வேண்டும்; இல்லையெனில், நானே இணைப்பு பணியில் ஈடுபடுவேன்' என எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், செங்கோட்டையன் மற்றும் அவருக்கு ஆதரவளித்தவர்களின் கட்சி பதவிகளை, பழனிசாமி பறித்துள்ளார். இது, அ.தி.மு.க.,வில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று காலை கோவை வந்த செங்கோட்டையன், டில்லி கிளம்பிச் சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மனம் சரியில்லாததால், ஹரித்துவாரில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்கிறேன். பா.ஜ., தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை. ''கட்சியின் நன்மைக்காக, நியாயமான கோரிக்கையை தான் தலைமையை நோக்கி வைத்துள்ளீர்கள்; எனவே, கலங்க வேண்டாம் என தொண்டர்கள் சொல்கின்றனர். என் கருத்துக்கு மாறுபட்ட கருத்தை யாரும் தெரிவிக்கவில்லை,'' என்றார்.

செங்கோட்டையனின் ஹரித்துவார் பயணம் குறித்து, அவரது ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:

முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரிடம் பேசிய பின்தான், பழனிசாமிக்கு எதிராக பொதுவெளியில் பேசுவது என செங்கோட்டையன் முடிவெடுத்தார். அவர்கள் உடன் வருவர் என்ற தைரியத்தில் தான், பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார். ஆனால், அவரது கட்சி பதவிகளை பறித்த பிறகும், முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காதது, செங்கோட்டையனுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் மட்டும் பேசினால் எதுவும் நடக்காது; 10 முக்கிய நிர்வாகிகள் குரல் கொடுத்தால், பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று தான் பேசியிருந்தார். ஆனால், இப்போது பழனிசாமியை எதிர்க்க துணிவின்றி, அவருக்கு எதிராக யாரும் வாய் திறக்கவில்லை. இதனால், செங்கோட்டையன் விரக்தி அடைந்துள்ளார். அதனால் தான் மன அமைதிக்காக ஹரித்துவார் சென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

அதிர்ச்சி அளித்த பண்ணாரி

பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பண்ணாரி, செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர். கடந்த 5ம் தேதி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு கெடு விதித்து செங்கோட்டையன் பேட்டி கொடுத்தபோது உடனிருந்தார். ஆனால், நேற்று செங்கோட்டையன் டில்லி புறப்பட்டதும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலர் செல்வராஜை சந்தித்து, பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். இது, செங்கோட்டையன் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், பவானிசாகர் தொகுதியில், 'சீட்' உறுதி என வாக்குறுதி அளிக்கப்பட்டதால், பழனிசாமி பக்கம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 09, 2025 10:33

இந்த ஸ்லீப்பர் செல் அடுத்த ஓபிஎஸ். சசிகலா உள்ளே வந்தவுடனேயே இவர் ஒரு ஸ்லீப்பர் செல் என்பது அனைவரும் புரிந்திருப்பார்கள். ஆனால் இவருடைய தகுதிக்கும் மரியாதையையும் இவரையே இவர் தரம் தாழ்த்தி ஸ்லீப்பர் செல்லாக சென்றது தான் வேதனை. அதிமுகவில் இருந்து வெளியே தள்ளப்பட்ட சசிகலா ஓபிஎஸ் தினகரன் செங்கோட்டையன் போன்ற அனைவரும் இது எம்ஜிஆர் கட்சி ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி என்று உதட்டளவில் தான் பேசுகிறார்கள். ஆனால் அதிமுக சின்னமான இரட்டை இலையை முடக்குவதிலும் அதிமுகவை தோன்றக் வைப்பதிலும் தான் இவர்கள் முழு கவனமும் உள்ளது. இவர்களின் இந்த எண்ணத்தை திமுக நன்கு பயன்படுத்திக் கொண்டு ஸ்லீப்பர் செல்கள் மூலம் இவர்களை தூண்டி விட்டு வெற்றி பெற வியூகம் அமைக்கிறது.


Moorthy
செப் 09, 2025 08:21

இவர் பெயருக்கு ஏற்றார் போல் செங்கோட்டை அமைந்துள்ள டெல்லிக்கு எத்தனை முறை படை எடுத்தாலும், பூஜ்யம் தான் கிட்டும் ராஜ்ஜியம் கனவே


Moorthy
செப் 09, 2025 07:13

ஸ்வாமி மட்டும் என்னைக்கு வாய் திறந்து பேசியிருக்கு?? செங்கோட்டையன் குரூப் தா வே காவிற்கு தாவுவதே சால சிறந்தது செங்கோட்டையன் மீண்டும் 2026 இல் கோபி எம் மேல் எ ஆவார்


c.mohanraj raj
செப் 09, 2025 06:36

இந்த ஆளுக்கு எல்லாம் ஆதரவா அப்படியே ஓடிப் போய் விடு


Manaimaran
செப் 09, 2025 05:14

கமண்டலம் காவி . இதுதான் உனக்கு ஓடிப்போ