உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி ராஜினாமா: கவர்னர் ஏற்பு

செந்தில் பாலாஜி ராஜினாமா: கவர்னர் ஏற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அமைச்சரவையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 34 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், சிறை தண்டனை பெற்றதால் பொன்முடி, அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். அதனால், அமைச்சர்கள் எண்ணிக்கை, 33 ஆக குறைந்தது.அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் அவர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக, முதல்வருக்கு கடிதம் எழுதினார்.முதல்வர் அந்த கடிதத்தை ஏற்று, கவர்னருக்கு பரிந்துரை செய்தார். செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக, கவர்னர் அறிவித்துள்ளார். இதையடுத்து, தமிழக அமைச்சரவையில், முதல்வர் தவிர்த்து அமைச்சர்களின் எண்ணிக்கை, 32 ஆக குறைந்துள்ளது.முதல்வருக்கு செந்தில் பாலாஜி எழுதியுள்ள கடிதத்தில், 'நீதிக்கான என் போராட்டத்தில், என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த முதல்வருக்கு நன்றி. தனிப்பட்ட காரணத்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி