உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி சகோதரர் கோர்ட்டில் ஆஜர்!

செந்தில் பாலாஜி சகோதரர் கோர்ட்டில் ஆஜர்!

சென்னை :சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார்.கடந்த 2011 - 2015 அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். பணி நியமனங்களுக்காக பணம் பெற்று மோசடி செய்ததாக, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக, சி.பி.சி.ஐ.டி., மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ், வழக்குப்பதிவு செய்தது.

குற்றப்பத்திரிகை

இந்த வழக்கு விசாரணை, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது, கூடுதல் குற்றப்பத்திரிகையை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர். இதில், 2,100க்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, 2023 ஜூன் 14ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு எதிராக, 2023 ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பான விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு, பலமுறை, 'சம்மன்' அனுப்பியும், அவர் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அசோக்குமார், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் சண்முகம், கார்த்திகேயன், கணேசன், வெற்றிச்செல்வன், அருண் ரவீந்திர டேனியல், ஆல்பிரட் தினகரன், ஜெயராஜ்குமார், பழனி, லோகநாதன், பிரபு, அனுராதா ரமேஷ் ஆகிய 12 பேருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை, கடந்த ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்டது.சம்மன்இதை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், ஏப்., 9ல் அசோக்குமார் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக, 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்தி கேயன் முன், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உட்பட, 12 பேரும் நேரில் ஆஜராகினர்.அதையடுத்து, அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு பிளீடர் ரஜினீஷ் பதியில் ஆஜராகி, ''கூடுதல் குற்றப்பத்திரிகையுடன் சேர்த்து, 5,000க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு, அவை மின்னணு வடிவில் வழங்கப்படும்,'' என்றார்.இதற்கு, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'மின்னணு வடிவில் மட்டும் இல்லாமல், காகித வடிவிலும் வழங்க வேண்டும். அப்போது தான் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும்' என்றனர்.'புதிய சட்டத்தின்படி மின்னணு முறையிலும் ஆவணங்கள் வழங்கலாம்' எனக் கூறிய நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்று, குற்றப்பத்திரிகை நகல்களை வழங்க தயாராக இருக்குமாறு, அமலாக்கத் துறை தரப்புக்கு அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Dr.C.S.Rangarajan
ஏப் 10, 2025 16:24

குற்றத்தை சுட்டிக்காட்ட ஒரு விரலை, ஒருவரை நோக்கி குறிப்பிட்டமைக்கே எத்தனை கோடி குற்றங்கள் என வியக்கும் நிலை என்றால், , இனி யார், யார் எத்தனை விரல்களை தூக்கினால் எத்தனை மாண்பு மிகு இனி மாண்பு குறை களாக ஆகக்கூடும்?


sivakumar Thappali Krishnamoorthy
ஏப் 10, 2025 15:16

பிரதான காரணம் .


Mettai* Tamil
ஏப் 10, 2025 13:32

ஒளிஞ்சு விளையாடும் விளையாட்டில் வெற்றி ...மேன் மேலும் வெற்றி பெற எங்கள் தலைமறைவு தம்பிக்கு வாழ்த்துக்கள் ....


thulasi ramu
ஏப் 10, 2025 15:18

தி மு க சப்போர்ட் ல பிழைப்பு ஓடிவிட்டு .... இதுல என்ன சாதனை வேண்டி கிடக்கு ?


ஆரூர் ரங்
ஏப் 10, 2025 11:40

தொகை சால் தமிழர் விருது அளிக்கவேண்டும். அண்ணாவின் உண்மைத் தம்பி.


...
ஏப் 10, 2025 19:04

ஒளிந்து கொண்டு வென்ற தமிழர் விருது


Barakat Ali
ஏப் 10, 2025 11:34

உண்மையான காரணம் என்னவாக இருக்கும் ????


SP
ஏப் 10, 2025 10:55

தலைமறைவாக இருந்ததற்கு எந்த தண்டனையும் கிடையாதா? உடனே ஜாமின். நீதிமன்றத்திற்கு சென்றால் தப்பித்து விடலாம் என்ற நிலை உருவாக்கி விட்டது. மத்திய அரசு நீதிமன்றங்கள் விசயத்தில் உடனடியாக சீர்திருத்த நடவடிக்கையை தொடங்கினால் ஒழிய இதற்கு விடிவு கிடையாது முதலில் கொலீஜியத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்.


Madras Madra
ஏப் 10, 2025 10:36

எல்லாரையும் முட்டாளாக்கி விட்டு இன்று நல்லவன் ஆக ஆஜர் இன்னும் எத்தனை கேவலங்கள் அரங்கேறுமோ ? தெரியவில்லை


sankar
ஏப் 10, 2025 09:37

வேங்கை வயலுக்கு பிறகு இது ஒரு விரைவான கண்டுபிடிப்பு


Nallavan
ஏப் 10, 2025 09:07

பாதி பணம் தீ க்கு இறை, மீதி யாருக்கு இறை ?


vbs manian
ஏப் 10, 2025 08:58

உலகில் வேறு எங்கும் நடக்காத அதிசயம் புதிய சட்ட நகல்கள் உருவாக்க படுகின்றன. நீதி செங்கோல் மங்கி மறைகின்றன.


...
ஏப் 10, 2025 19:06

இறைவன் நீதி மறையாது. எல்லாம் ஏழை மக்களின் வரிப்பணம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை