உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு

 செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு

சென்னை: 'முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய, ஜாமின் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு இருந்தாலும், நீதிமன்ற விசாரணைக்கு, நேரில் ஆஜராக வேண்டும்' என, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார், செந்தில் பாலாஜி முன்னாள் உதவியாளர் சண்முகம் உட்பட 13 பேருக்கு எதிராக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. வழக்கில், செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்த வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செந்தில்பாலாஜி, அவரது தம்பி உட்பட 10 பேர் நேரில் ஆஜராகினர். அப்போது, 'உச்ச நீதிமன்றம் ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தி உள்ளது' என, செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ''ஜாமின் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டாலும், நீதிமன்ற விசாரணைக்கு அது பொருந்தாது. சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகிதான் ஆக வேண்டும்,'' என கூறி, விசாரணையை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ