உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலையாட்களுக்கு தலா ரூ.80 லட்சத்தில் தனி வீடு; அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தரின் தாராள மனசு

வேலையாட்களுக்கு தலா ரூ.80 லட்சத்தில் தனி வீடு; அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தரின் தாராள மனசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: “நம்மள நல்லா பாத்துக்கறவங்கள, நாமும் நல்லா பாத்துக்கணும் தானே” என, தாராள மனசுடன் சிரிக்கிறார், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி. ஒரு கல்வியாளராகவே பலருக்கும் அவரைத் தெரியும். ஆனால், பெரும் கொடையாளரும் கூட என்பது, அவரின் சமீபத்திய செயலால் தெரிய வந்திருக்கிறது. தனது வீட்டில் பணிபுரியும் கார் டிரைவர் புவனேஸ்வரன், சமையல், வீட்டு வேலை, தோட்ட வேலை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பாக்யா, கிருஷ்ணவேணி, பிரபாவதி என நான்கு பேருக்கும், தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். தலா 3 சென்ட் பரப்பில், 1,000 சதுர அடியில் 2 படுக்கை அறை கொண்ட வீடுகளை, தனது சொந்த செலவில் கட்டித் தந்திருக்கிறார். ஓரளவு வருமானமுள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கே பெரும் கனவாக இருக்கும் சொந்த வீட்டை, தன் வீட்டில் பணிபுரிபவர்களுக்காக, அதுவும் தலா ரூ.80 லட்சத்தில் கட்டி, நிறைவேற்றித் தந்திருக்கிறார். இப்படி வீடு கட்டிக் கொடுப்பது இவருக்கு முதல் முறை அல்ல. துணைவேந்தராக பணிபுரிவதற்கு முன், பெங்களூருவில் தங்கி பணிபுரிந்திருக்கிறார். அப்போது, தன் வீட்டில் பணி செய்த 2 பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். அவர் அங்கு வசித்ததே, 11 மாதங்கள்தான். சென்னையில் பணிபுரிந்தபோது, தன் வீட்டில் பணிபுரிந்தவருக்கும் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார். தன் வீட்டில் பணிபுரிவர்களின் மருத்துவ செலவு, குடும்ப விசேஷங்கள், அவர்களது குழந்தைகளின் கல்விச் செலவு என அனைத்துக்கும் உதவிக் கரம் நீட்டியிருக்கிறார். சிலருக்கு திருமணத்தையும் நடத்தி வைத்திருக்கிறார். தற்போது, கோவையில் தனது வீட்டில் பணிபுரியும் நால்வருக்கு தனி வீடு கட்டிக் கொடுத்திருப்பதை அறிந்து அவரிடம் பேசினோம். 'இப்ப இருக்கற பொருளாதார சூழல்ல, சம்பளம் வாங்கி காசு சேர்த்து வீடு கட்ட எல்லாராலும் முடியுமா? அவங்க சம்பளம் குடும்பத்த நடத்தவே போதுமானதா இருக்கும். இப்போதைக்கு என் வீட்டு வளாகத்திலேயே, பணியாட்களுக்கான குடியிருப்பு உள்ளது. அவர்கள் வேலையை விட்டு, ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வார்கள். நாம் மட்டும் சொகுசாக, மகிழ்ச்சியாக இருந்தால் போதுமா. நம்மை நன்றாக பார்த்துக் கொள்கிறவர்களும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டாமா. அவர்களும் நம் குடும்பத்தில் அங்கம்தானே. முடிஞ்ச வரைக்கும் உதவி செய்வோம் என்றே, அவர்களது பெயரிலேயே தனித்தனியாக நிலம் வாங்கி, தனி வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறேன்' என்றார் பாலகுருசாமி. 'ஒருவருக்கு ரூ.80 லட்சம் அன்பளிப்பு என்பது பெரிய தொகை இல்லையா…' என்றோம். “அவங்களும் நல்லா இருக்கணுமில்ல. அவங்களால, இந்தக் காச சேத்த முடியுமா. குழந்தைங்களோட சின்ன வாடகை வீட்ல கஷ்டப்பட வேணாம்னுதான், கொஞ்சம் பெரிய வீடா கட்டிக் கொடுத்திருக்கோம். எல்லாரும் சந்தோஷமா இருப்போமே” என்றார்.தான் செய்திருப்பது பேருதவி என்ற தொனி, அவரின் பேச்சில் துளியுமில்லை. அவருக்கு திருக்குறளில் மிகுந்த ஈடுபாடு என்பது தெரிந்ததே. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராம்! எல்லாருக்கும் பணம் வாய்ப்பதில்லை; அப்படி வாய்த்த வர்கள், எல்லாருக்கும் மனம் வாய்ப்ப தில்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

Jahir Hussain
செப் 07, 2025 13:29

பாராட்டப்பட வேண்டிய செயல் தான்... அதனை பாதுகாத்து கொள்ள வேண்டியது பரிசு பெற்றவர்களின் கடமை...


ponssasi
செப் 06, 2025 17:13

கொடை வள்ளாலாக இருந்தாலும் அனைவருக்கும் கொடுத்துவிட முடியாது. அவர் மனசில் சிம்மாசனம் போட்டு அமரும் அளவுக்கு அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு தேவை. உதவுவதற்கு வள்ளாலாக இருக்கவேண்டிய அவசியமில்லை நல்ல மனிதனாக இருந்தால் போதும்.


Sheik Nawfal
செப் 06, 2025 07:31

ஓரு துணை பேராசிரியர் பதவிக்கு 80 லட்சம். மொத்தம் வருமானம் கணக்குப் பார்த்தால் எங்கேயோ போய்விடும்...


Nagarajan
செப் 07, 2025 14:01

சரி உங்கள் எண்ணப்படி வாங்கியிருந்தாலும் அடுத்தவர்களுக்கு செய்யும் மனம் எவ்வளவு பேருக்கு உண்டு. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் 100 கோடிகளுக்கு மேல் சொத்து வைத்தும் ஏதாவது செய்கிறார்களா? நீங்களும் செய்ய மாட்டீர்கள், செய்பவர்களையும் குறை சொல்வீர்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 06, 2025 02:31

இப்படி கோடிக்கணக்கில் அள்ளி வீசுற அளவுக்கு அம்புட்டு சம்பளம் இருக்காதே செமத்தியா காசு பார்த்திருக்காருன்னு தெரியுது.


Bala
செப் 06, 2025 07:39

This shows that you are not aware of other opportunities they get to earn money. He has written many books in computer science.


Ramesh Arumugam
செப் 06, 2025 08:18

அவர் சொந்த ஊருக்கு ஒன்றுமே செய்ததில்லை . அண்ணன் தம்பியை கூட போய் பார்ப்பதில்லை


ManiMurugan Murugan
செப் 06, 2025 00:15

அருமை வாழ்த்துக்கள்


Sun
செப் 05, 2025 18:19

சில பேர் செய்யும் நல்ல காரியங்கள் வெளி உலகிற்கு தெரிவதே இல்லை.வெற்று விளம்பரம் செய்து சூட்டிங் நடத்துபவர்கள்தான் ஊடகங்களால் கொண்டாடப் படுகிறார்கள்.


Kulandai kannan
செப் 05, 2025 17:34

திமுகவிற்கு பிடிக்காத நபர்.


ச. பாலாஜி, சென்னை
செப் 05, 2025 16:49

ஈகை உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்..


Oviya Vijay
செப் 05, 2025 15:24

அய்யா வேணு, இவர் ஒன்றும் திராவிட கும்பல் அல்ல... முறைகேடாக சம்பாதிக்க...இவரது பற்பல பொறியியல் புத்தக பதிப்புக்கான, உரிமைத்தொகையே பல கோடிகள் வரும்...நம் நாட்டின் மிகத் தலைசிறந்த பொறியியல் வல்லுநர்...


Anantharaman Srinivasan
செப் 05, 2025 14:58

Private company யில் வேலைக்கு போய் அவஸ்தைபடுவதற்கு பாலகுருசாமி மாதிரி நல்ல உள்ளம் படைத்தவர்களிடம் வேலைக்கு போகலாம். எதற்கும் Luck வேண்டும்.


முக்கிய வீடியோ