வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பயண நேரத்தை மெட்ரோ குறைக்கிறது அதை நேரத்தில் பயண கட்டணத்தை குறைத்தால் நன்றாக இருக்கும்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (அக்.,17) முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து மெட்ரோ நிர்வாகம், சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (அக்.,17) முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம்போல் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wcyl6ovl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மெட்ரோ ரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக, மெட்ரோ ரயில் சேவை கூடுதலாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
பயண நேரத்தை மெட்ரோ குறைக்கிறது அதை நேரத்தில் பயண கட்டணத்தை குறைத்தால் நன்றாக இருக்கும்