உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மனிதர்களுக்கு சேவை செய்வதும் கடவுளுக்கு சேவை செய்வதும்: சமம் துணை ஜனாதிபதி பேச்சு

 மனிதர்களுக்கு சேவை செய்வதும் கடவுளுக்கு சேவை செய்வதும்: சமம் துணை ஜனாதிபதி பேச்சு

கோவை: மனிதர்களுக்கு சேவை செய்வது, கடவுளுக்கு சேவை செய்வதற்கு சமம் என, சனாதன தர்மம் கற்பிப்பதாக, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்தியா அறக்கட்டளை சார்பில், சிருங்கேரி சாரதா பீடத்தின் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானத்திற்கு, மரியாதை செலுத்தும் விழா மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நேற்று டில்லியில் நடந்தது. இதில், 'ஹிந்து சமய நிறுவனங்கள்: பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் மதங்களுக்கு இடையேயான ஈடுபாடுகள்' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடந்தது. இதில், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பங்கேற்று பேசியதாவது: ஆதிசங்கராச்சாரியார், பாரதம் முழுவதும் பயணம் செய்து சனாதன தர்மத்தை புத்துயிர் பெற செய்து, பல்வேறு தத்துவங்களை ஒருங்கிணைத்தார். 12 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, சிருங்கேரி மடம், கருணை மற்றும் தன்னலமற்ற மதிப்புகளை நிலை நிறுத்தி, ஹிந்து சிந்தனையையும், நடைமுறையையும் வடிவமைத்துள்ளது. மனித குலத்திற்கு சேவை செய்வது, கடவுளுக்கு சேவை செய்வது என்று சனாதன தர்மம் கற்பிக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
நவ 25, 2025 12:15

மனித குலத்திற்கு சேவை அரசியலில் செய்தால் ஆண்டவனுக்கு செய்த சேவையாக கருத இயலாது. தமிழ்நாட்டு அரசியலில் ஹிந்து சமுதாயத்திற்கும் பிற மதங்களின் சமுதாயத்தினர்களுக்கு வழங்கும் சேவையை ஒப்பிட்டால் எப்படி கருதுவது? நிச்சயம் கடவுள் சேவை என்று சொல்லமுடியாது. மனித பாரபட்ச சேவை என்றுதான் அழைக்கவேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை