உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மன்னார் வளைகுடா கடலில் கழிவுநீர்: அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து

மன்னார் வளைகுடா கடலில் கழிவுநீர்: அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் 1 முதல் 21 வார்டுகளில், 65,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக மன்னார் வளைகுடா கடலில் பல இடங்களில் பல ஆண்டுகளாக விடப்படுகிறது. 1990க்கு முன் கீழக்கரை மன்னார் வளைகுடா கடலோரப்பகுதிகளில் முத்துக் குளித்தலும், அரிய வகை சங்கு சேகரித்தல் உள்ளிட்ட பல வகையான கடல் தொழில் நடந்தது. கழிவுநீரின் தாக்கத்தால் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீன்கள், ஆமைகள் போன்ற அரிய வகை உயிரினங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.மீனவர்கள் கூறுகையில், 'கீழக்கரை கடற்கரையில் இருந்து 7 முதல் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் தீவுகள் வரிசையாக அமைந்துஉள்ளன. கழிவுநீர் கலப்பால் கடல் நீர் தொடர்ந்து மாசுபடுகிறது. மீன்வளம் கிடைக்காததால் தீவுகளை தாண்டி ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டி உள்ளது' என்றனர்.கடந்த 2022ல் கீழக்கரைக்கு வந்த அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கழிவுநீர் கலக்கும் இடத்தில் விபரம் தெரியாமல் கடலில் குளித்தார். பின்னர், இந்த விபரம் தெரிந்து, கடல் நீரை துாய்மையாக வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.நகராட்சி தலைவர் செகானாஸ் ஆபிதா கூறுகையில், ''நகரில் எட்டு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் பணிகள் துவங்க உள்ளது. விரைவில் கடலில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
டிச 30, 2024 16:25

உயிரினங்கள் எல்லாம் இலங்கை பார்டரைத் தாண்டி ஓடிப் போயிருக்கும். திருட்டு திராவினுங்க பாழ் படுத்தாத நீர்நிலையே இல்லை.


Kasimani Baskaran
டிச 30, 2024 08:15

சென்னையில் பல பகுதிகளில் இருந்து சாக்கடையாக ஓடும் கூவம் நேரடியாக கடலில் கலக்கிறது. ஒரு பெருநகரத்தின் கழிவுகள் கடலில் கலப்பதால் பல உயிரினங்களுக்கு பாதிப்பு உண்டாகிறது. அதை ஒப்பிட்டால் இது ஒன்றும் இல்லை.


RAMAKRISHNAN NATESAN
டிச 30, 2024 09:38

முற்றிலும் சரி .....


அப்பாவி
டிச 30, 2024 06:24

வெறும் வாய்வார்த்தையாய் நடவடிக்கை எடுங்கன்னு சொல்லிட்டு போறதுக்கு ஒரு வெட்டி அமைச்சர். 2022 ல குளிச்சவர் இதற்கு பொறுப்பான அமைச்சருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கச் சொல்லவேண்டாமா? பொறுப்பான அமைச்சர்கள் யாராவது இருக்காங்களே? அவிங்களுக்கு திருட்டு பிரியாணிகளை சமாளிக்கவே நேரம் பத்தலை. எட்டு இடங்களில் கழிவுநீர் சுத்தகரிப்பு மையம் எழுதி வையுங்க. விளங்கிடும்.


Palanisamy T
டிச 30, 2024 03:48

அப்போதைய அமைச்சர் சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியப் பிறகும் நடவடிக்கையை எடுக்கவில்லையே அரசு ஊழியர்களின் மெத்தனப் போக்கையும் பொறுப்பற்ற செயலையும் இது காட்டுவதாகவுள்ளது. மக்க்கள் வரிப் பணத்தில் அவர்களுக்கு மாத வருமானம். பணி ஓய்வு பெற்ற பிறகு எஞ்சிய வாழ்நாட்களில் பணிவோய்வு வருமானம். தனியார்துறை ஊழியர்களுக்கு இந்தச் சலுகையில்லை, வாய்ப்புமில்லை. இதை யெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் இவர்கள் இப்படி பொறுப்பற்றவர்களாக நடந்துக் கொள்வார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை