உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை; இ.பி.எஸ்., கடும் கண்டனம்

அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை; இ.பி.எஸ்., கடும் கண்டனம்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sezd3njo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அறிக்கை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது.பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டசபையில் வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின் இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? யார் அந்த SIR என்று கேட்டாலே ஸ்டாலின் எரிச்சல் ஆகுகிறார். உங்கள் ஆட்சியில் இதுபோன்ற 'சார்'கள் காப்பாற்றப் படுவதால் தான், மேலும் பல 'சார்'கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ், கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Samy Chinnathambi
ஜன 13, 2025 14:17

மாடல் அரசு என்றால் பொம்மை அரசு என்று அர்த்தம். பார்வைக்கு மட்டும் தான் .அதனால் ஒன்னும் செய்ய முடியாது..யார் வேண்டுமானாலும் எடுத்து விளையாடலாம்.


raja
ஜன 13, 2025 13:54

திராவிட மாடல் என்பதற்கு பதிலாக ...மாடல் என்று பெருமையாக கூறலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை