உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் விஜய் மீது காலணி வீச்சு: போலீசில் புகார்

நடிகர் விஜய் மீது காலணி வீச்சு: போலீசில் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோயம்பேடு: நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி, கோயம்பேடு காவல் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் அப்புனு என்பவர் நேற்று புகார் மனு அளித்தார்.மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தததாவது: நடிகர் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி காலமானார். அன்று இரவு 10:30 மணிக்கு கோயம்பேடில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு அவருக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத நபர், காலணியை விஜயை நோக்கி வீசினார். இச்செயலில் ஈடுபட்ட அந்த நபரை கண்டுபிடித்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

செந்தமிழ் கார்த்திக்
ஜன 05, 2024 09:56

அப்படியே விட்டிருந்தால் கூட காலப்போக்கில் இந்த நிகழ்வு காணாமல் போயிருக்கும். இப்படி கம்பளைண்ட் குடுத்து, "விஜய் செருப்பால் அடி வாங்கினார்" என்று ஊர் முழுக்க பரப்பி விட்டு மானத்தை வாங்கியவர்களை எல்லாம் கட்சியில் சேர்த்து கொண்டு என்ன தான் அரசியல் செய்ய போகிறார் விஜய்? கால கொடுமை. இன்னொரு பவன் கல்யாண் போல.


நாஞ்சில் நாடோடி
ஜன 05, 2024 08:53

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு


Matt P
ஜன 06, 2024 07:25

..வடிவேலு வந்திருந்தால்


Sai
ஜன 05, 2024 08:31

அடுத்த வருஷ பொங்கல் வர்றப்போ இந்த புகார குடுத்துருக்கலாம்.


பேசும் தமிழன்
ஜன 05, 2024 07:54

வளர்த்து விட்ட ஏணியை எட்டி உதைக்கும் ஆட்களுக்கு.... இப்படி தான் நடக்கும் !!!


பேசும் தமிழன்
ஜன 05, 2024 07:52

ஏண்டா.. அவனே அடி வாங்கி கொண்டு இருக்கிறான்.... நீங்கள் வேறு அதை ஊரெல்லாம். போஸ்டர் அடித்து ஒட்டி கொண்டு உள்ளீர்கள் ???


ராஜா
ஜன 05, 2024 07:49

பெரிய பதவியில் இருப்பதால் விட்டுவிட்டார்கள் போல தெரிகிறது.


எவர்கிங்
ஜன 05, 2024 06:50

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை நலம் விசாரிக்கவந்த வைகோ மீது காலணி வீசியது தக்காளி சட்டினியா


வாய்மையே வெல்லும்
ஜன 05, 2024 07:32

எவர் கிங் அப்போ ரோசம் இருந்திருந்தால் வைகோ தீயமூர்க்கர்களிடம் அன்னான் வைகோ தஞ்சம் அடைந்தது பற்றியும் சொல்லி இருக்கலாம்.. பரவா இல்லை நான் உங்களுக்கு பாய்ண்ட் எடுத்து கொடுக்கிறேன்


குமரி குருவி
ஜன 05, 2024 06:37

வேங்கை வயலே விடைதெரியலை இதில் செருப்பு வீசிய வரை கண்டு பிடிப்பது கடினமே


Ramesh Sargam
ஜன 05, 2024 06:37

அரசியலுக்கு வந்தபிறகு இதுபோன்ற 'மரியாதைகள்' கிடைக்கும். என்ன செய்வது, பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இன்று காலனி. நாளை அழுகிய தக்காளி, அழுகிய முட்டை என்று ஒன்றன்பின் ஒன்றாக விழும். எல்லாவற்றையும் துடைத்து முன்னேறவேண்டும்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ