அம்பேத்கரை ஜாதி வட்டத்துக்குள் அடைக்கலாமா
தமிழகத்தில் ஈ.வெ.ரா., என்றால், வட மாநிலங்களில் மக்களுக்காக குரல் கொடுத்தவர் அம்பேத்கர். ஈ.வெ.ரா.,வை புத்த மதத்துக்கு மாறுமாறு அம்பேத்கர் வற்புறுத்தினார். ஆனால், புத்த மதத்துக்கு மாற ஈ.வெ.ரா., மறுத்துவிட்டார். 'புத்த மதத்துக்கு மாறினால், ஹிந்து மதத்தைப் பற்றி பேச முடியாது' எனக் கூறியே ஈ.வெ.ரா., மறுத்துள்ளார்.அம்பேத்கரை ஒரு சிலர், ஜாதி வட்டத்துக்குள் அடைத்து விடுகின்றனர். கல்வியால் முன்னேற்றம் அடைந்த அம்பேத்கர், அனைவருக்கும் பொதுவானவர். ஒரு சமுதாயத்துக்கு மட்டுமின்றி, அனைத்து சமுதாய மக்களுக்காகவும் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார். எனவே, அம்பேத்கர் அனைவருக்கும் சொந்தமானவர்.