உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளுக்கு திருமணம் செய்து வைத்த ஜக்கி மற்றவர் துறவியாவதை ஊக்குவிக்கலாமா?

மகளுக்கு திருமணம் செய்து வைத்த ஜக்கி மற்றவர் துறவியாவதை ஊக்குவிக்கலாமா?

சென்னை: 'தன் மகளுக்கு ஜக்கிவாசுதேவ் திருமணம் செய்து வைத்து, வாழ்க்கை அமைத்து கொடுக்கும் போது, மற்ற பெண்கள் மொட்டை அடித்து, துறவியர் ஆவதை ஊக்குவிக்கலாமா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.கோவை வடவள்ளியை சேர்ந்த பேராசிரியர் காமராஜ் தாக்கல் செய்த மனு: யோகா கற்க ஈஷா மையத்துக்கு சென்ற என் மகள்கள் கீதா, லதா, அங்கேயே தங்கி விட்டனர். தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என, அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஈஷா மையத்துக்கு எதிராக, நாங்கள் எந்த போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது எனவும், அவ்வாறு செய்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக, இரண்டாவது மகள் வாயிலாக நிர்ப்பந்திக்கின்றனர்.என் மகள்கள் இருவரும், ஈஷா மையத்தில் இருந்து வெளியே வந்தால், அவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மகள்கள் இருவரும் நீதிபதிகள் முன் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரித்தனர். பின், பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர்.தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து, செட்டில் செய்த ஜக்கிவாசுதேவ், மற்ற இளம் பெண்கள் மொட்டை அடித்து, துறவியர் ஆவதை ஊக்குவிக்கலாமா என்று, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு, நீதிமன்றத்தில் ஆஜரான இருவரும், 'திருமணம் செய்து கொள்வது, அந்த பெண்ணின் விருப்பம்' என, பதில் அளித்தனர்.மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.புருஷோத்தமன், ''ஈஷா மையத்தின் நடமாடும் மருத்துவ சேவையில் பணியாற்றிய மருத்துவர், பள்ளி குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்ததாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மனுதாரரின் மகள்கள் இருவரும், கோவை ஈஷா மையத்தில் சேர்ந்துள்ளனர். பெண்கள் சிலரை மூளைச்சலவை செய்து, துறவியராக ஈஷா மையம் மாற்றுவதாகவும், பெற்றோர், உறவினர்களை சந்திக்க அனுமதி மறுப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மையத்தில் நிலவும் சூழ்நிலையை, மனுவில் விமர்சித்துள்ளார். ஈஷா மையத்தின் மருத்துவர் ஒருவருக்கு எதிராக, போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், மனுதாரர் தெரிவித்தார்.குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.ஈஷா மையத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை, நீதிமன்றத்தில் ஆஜரான இரு பெண்களும் பேசிய விதத்தை பார்க்கும் போது, குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள உண்மையை புரிந்து கொள்ள, மேலும் விரிவாக ஆராய வேண்டியதுள்ளது.எனவே, ஈஷா மையத்துக்கு எதிராக பதிவான குற்ற வழக்குகளின் விபரங்களை, மனுதாரரும், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரும் தாக்கல் செய்ய வேண்டும்.ஈஷா மையத்துக்கு எதிரான வழக்குகளை கைவிடும் வரை, இளைய மகள் லதா, சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக, மனுதாரருக்கு, மொபைல் போன் வாயிலாக மூத்த மகள் கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்தும், கோவை போலீசார் விசாரித்து, அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.விசாரணையை, வரும் 4ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

sridhar
அக் 05, 2024 11:12

எத்தனையோ கிறிஸ்துவ பெண்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள் , சிலர் கன்யாஸ்திரீ ஆகிறார்கள் . சுய விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளும் முடிவுகளுக்குள் நீதிமன்றம் தலையிடலாமா . மகளுக்கு திருமணம் அவர் விருப்பத்தின் பேரில் செய்துவைத்தது தவறில்லை , மகளையே மணப்பது தான் தவறு .


S. Neelakanta Pillai
அக் 02, 2024 13:07

தேவை இல்லாத ஒப்பீடு. நீதிபதிகள் எல்லை மீறுகிறார்கள். இது விலங்கோ அல்லது பொருள் சார்ந்த விசயம் இல்லை. எல்லோரும் சுயமாக முடிவு எடுக்கிற உரிமை உள்ளவர்கள். அப்படி இருக்கும்போது ஜக்கி தன் மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தார் என்று சொல்வது அதிகப்பிரசங்கித்தனம். அவரது மகள் நீதிபதி மீது வழக்கு தொடரலாம்.


Ganesun Iyer
அக் 01, 2024 23:54

எல்லோருக்கும் அதே மாதிரி நடந்துகொள்ள வழி காட்டியதாக எடுத்துக் கொள்ளலாமா?


Arasu
அக் 01, 2024 22:24

மக்களுக்கு அறிவே இல்லையா ...இவன்க எதுக்கு அங்க பொண்ணுங்களை அனுப்புறாங்க .....அங்க என்ன நடக்குதுன் தெரியலை


Ramesh Sargam
அக் 01, 2024 21:23

ஒரு நாள் இதற்கெல்லாம் சரியான தண்டனை அனுபவிப்பார். அது கடவுள் கொடுக்கும் தண்டனை.


நசி
அக் 01, 2024 19:29

இந்த சென்னை கோர்ட் நீதியரசர்கள் மற்ற மத நடவடிக்கைகளில் இவ்வாறு கேள்வி எழுப்புவார்களா? கோயம்பேடு சரவணா ஹோட்டல் நத்தம் நிலத்தை பாஷ்யம் கட்டுமானம் வாங்கி பட்டா விண்ணபத்தை அரசு நிராகரிக்க வேண்டும் என்றார்கள்.இன்று வரைகட்டுமானம் தொடர்கிறது நத்தம்நிலத்தில். கலாநிதி வீராசாமி வீகேர் ஆஸ்பிட்டல் திருமங்கலம் நத்தம் நிலத்தில் உள்ளது அதை மெட்ரோ ரயில் எடுத்து கொள்ள முற்பட்ட போது நடந்த கேஸில் $68 கோடி இழப்பு கோரியது... அந்த நிலத்த 1 மாதத்தில் காலி செய்ய நீதியரசர்கள் உத்தரவிட்ட போதும் அரசோ கோர்ட்டோ ஓன்றும் செய்யவில்லை ஆனால் இஷா ரெய்டமேல் ரெயட்.. நீதிபரிபாலனம் பேஷ்


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 01, 2024 19:27

ஒரு துறவி எப்படி இருக்கணும் என்று அறிந்தவன் அவரிடம் போகமாட்டான் ...... அதே சமயம் அவர் திமுகவை சரியாக கவனிக்காமல் காலச்சேபம் பண்ண வாய்ப்பில்லை .....


Barakat Ali
அக் 01, 2024 18:46

நீண்ட சிந்தனை தேவை .....


Barakat Ali
அக் 01, 2024 18:43

ஹிந்துக்களுடன் பழகியுள்ளேன் ..... மற்ற மதங்களில் மதகுரு - எங்களுக்கு மௌல்வி / முல்லா - என்று ஒருவர் இருக்கிறார் .... அவர் மதநூலின் கருத்தையே பிரசங்கம் செய்வார் .... ஹிந்துக்களுக்கு அப்படி இல்லை ..... புற்றீசல்கள் பல உள்ளன ...... ஒவ்வொரு ஈசலும் ஒவ்வொரு தத்துவமாக உதிர்க்கிறார்கள் .... நல்ல பிசினஸ் ..... இதுதான் பிரச்னைகளுக்கு காரணம் ...... நல்ல குரு எப்படி இருப்பார் என்று ஒரு பிராம்மணரால் கண்டுபிடித்துவிட முடியும் ..... ஆனால் இவர் மற்ற பிரிவினருக்கு அதைச் சொல்லித்தர மாட்டார் .....


Sathyanarayanan Sathyasekaren
அக் 01, 2024 18:42

நீதிபதிகள் நீதி தருவதை தவிர வேறு விஷயங்களை சொற்பொழிவுகளை ஆற்றக்கூடாது என்று டெல்லி உச்சநீதிமன்ற நீபதி சொன்னதாக நியாபகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை