உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆரோக்கியமற்ற ரேஷன் பொருட்களால் மக்கள் அவதிப்பட வேண்டுமா: நயினார் நாகேந்திரன் கேள்வி

ஆரோக்கியமற்ற ரேஷன் பொருட்களால் மக்கள் அவதிப்பட வேண்டுமா: நயினார் நாகேந்திரன் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆரோக்கியமற்ற முறையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களால் நோய்த்தொற்று ஏற்பட்டு அவதிப்பட வேண்டுமா? என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் கழிவறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை சுகாதாரமற்ற நிலையில் கழிவறையில் அடுக்கி வைத்த திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுதான் நல்லாட்சியின் லட்சணமா? இவ்வாறு பொறுப்பின்றி செயல்பட்ட அதிகாரிகளுக்கும் அவர்களைக் கண்காணிக்கத் தவறிய அமைச்சர்களுக்கும் கழிவறையில் அடுக்கி வைக்கப்பட்ட அதே அரிசி மூட்டைகளிலிருந்து ஆளுக்கொரு கிலோ அரிசியை எடுத்துக் கொடுத்து பொங்கி சாப்பிடச் சொல்ல வேண்டும். ஏழைகள் என்றால் எத்தனை இளக்காரம் இந்த ஆளும் அரசுக்கு? ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அல்லல்படும் மக்கள், ஆரோக்கியமற்ற முறையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களால் நோய்த்தொற்று ஏற்பட்டு அவதிப்பட வேண்டுமா? கடந்த பட்ஜெட்டில் உணவு சேமிப்புத் துறைக்கான நிதியை திமுக அரசு குறைத்ததன் விளைவு தான் இன்று பராமரிப்பற்ற தானியக் கிடங்குகளில் உள்ள உணவுப் பொருட்கள் மழையில் நனைந்து அழுகி வீணாகிறது, ரேஷன் பொருட்களை சேமித்து வைக்க இடமில்லாமல் அரசு கழிவறையை நாடிச் செல்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவுப் பொருட்கள் முறையாக இருப்பு வைக்கப்படுகின்றனவா என்பதையும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்யவேண்டும்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kasimani Baskaran
ஜூலை 25, 2025 04:15

ஒரு காலத்தில் காமராசர் ரேஷன் அரிசிதான் சாப்பிட்டார் என்று நினைக்கையில் அரசாணை மூலம் தலைமை செயலகத்தில் உள்ள அணைத்து கேன்டீன்களிலும் ரேஷன் அரிசியை வைத்துதான் உணவு சமைக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்தால் ரேஷன் அரிசி எல்லாம் நிமிடத்தில் பாசுமதி அல்லது கருப்பு கவுனியாகிவிடும்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 24, 2025 21:31

அந்த 4 கோடியிலே நல்ல பொருளா வாங்கி தரலாமுல்ல?


திகழ்ஓவியன்
ஜூலை 24, 2025 21:08

அதை விடுங்க... அந்த 4 கோடி எந்த கேடியோடது


rama adhavan
ஜூலை 24, 2025 21:43

எதற்கு எடுத்தாலும் முட்டு கொடுக்கலாமா? எப்படி மக்கள் உங்க கட்சிக்கு ஓட்டு போடுவார்கள்.


அப்பாவி
ஜூலை 24, 2025 20:05

நல்லா சுத்தமா ஆரோக்கியமா இருக்கும்.


Padmasridharan
ஜூலை 24, 2025 20:04

கட்சித்தலைவர் என்ன செய்வார், இதில் சாமி. கடைக்கு சம்மந்தப்பட்ட ஆட்கள் என்ன சின்னக் குழந்தைகளா. கொடுக்கும் பொருட்களுக்கு அதிகமான சில்லறை வாங்கும் ரேஷன் கடைக்காரர்களுக்கு தெரியாதா. பண்டிகை சமயத்தில் தெரிஞ்சவங்க வரும்போது மட்டும் நல்ல கரும்பு, மற்ற பொருட்களை தனியாக வைத்து தருபவர்களுக்கு தெரியாதா. இதுவரை புடவை எல்லா பெண்களுக்கும் கொடுக்காமல் இருப்பவர்களுக்கு தெரியாதா.


முருகன்
ஜூலை 24, 2025 20:01

என்ன ஒரு அக்கறை தேர்தல் வருவதால் வந்த கரிசனம் இது


vivek
ஜூலை 24, 2025 20:41

உங்களுடன் நான்.....இது எதுக்கு முருகா......தேர்தல் வருதே....


Jack
ஜூலை 24, 2025 19:53

ரேஷன் சாமானுக்கு பதில் பணமா கொடுத்தால் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் லாபமா இருக்கும்


Anantharaman Srinivasan
ஜூலை 24, 2025 20:58

பணமாக தந்தால், முதல் தரமான பொருட்களுக்கான விலையை கோட் செய்து விட்டு மூன்றாம் தர பொருட்களை தந்து கமிஷன் அடிக்க முடியாதே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை