உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிருஷ்ணசாமிக்கு அரிவாள் பார்சல்; விவசாயிகள் சங்கம் சவால்

கிருஷ்ணசாமிக்கு அரிவாள் பார்சல்; விவசாயிகள் சங்கம் சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்லடம்: ''அரிவாள் அனுப்பி வைக்கிறோம்; தைரியம் இருந்தால் பானைகளை உடைக்க இங்கு வாருங்கள்'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது.

இதன் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:

தமிழகத்தில், கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என, கடந்த, 38 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இச்சூழலில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வன்முறையை துாண்டும் விதமாக, கள் குறித்து தொடர்ந்து தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே இவரது கருத்துக்கு பதில் தெரிவித்திருந்த நிலையில், 'கள் விஷம்' என்றும்; 'தமிழகத்தில், எங்கு கள் இறக்கினாலும், 100 பேருடன் அரிவாளோடு வருவோம்' என்றும் விவசாயிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். தென்னை, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நியாயமான போராட்டத்தை கிருஷ்ணசாமி தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறார். அவருக்கு நாவடக்கம் தேவை. இனியும் தொடர்ந்து இதேபோல் பேசி வந்தால், அவரை வீதியில் நடமாட விடமாட்டோம். அரசியல் விளம்பரம் தேட எத்தனையோ வழிமுறை உள்ளது. திராணி இருந்தால், ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளை மூடுவேன் என்று கூறிய தி.மு.க., அரசை எதிர்த்துப் போராடட்டும். கிருஷ்ணசாமிக்கு, அரிவாளை பார்சலில் அனுப்பி வைக்கிறோம்; தைரியம் இருந்தால், இங்குள்ள விவசாயிகளின் தோட்டத்துக்கு பானையை உடைக்க வரட்டும் என சவால் விடுகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramaraj P
ஜூன் 23, 2025 02:37

தெலுங்கன் தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் தான். தமிழ் தேசியம் வரும் அதுவரை ஆடுங்கள்.


Svs Yaadum oore
ஜூன் 22, 2025 07:34

திராணி இருந்தால், மதுக்கடைகளை மூடுவேன் என்று கூறிய தி.மு.க., அரசை எதிர்த்துப் போராடட்டும் என்று சவால் ....ஏன் இந்த கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மதுக்கடைகளை மூட சொல்லி இவனுங்கதான் போராட்டம் நடத்தட்டுமே ..அதை செய்ய இவனுங்களுக்கு திராணி இருக்குதா? ஊரெங்கும் ஆற்று மணல் கொள்ளை, மலையை உடைத்து கேரளா ஏற்றுமதி என்று விவசாயம் சீரழியுது.. சாராயம் குடியால் விவசாய ஆள் கிடைக்காமல் நாற்று நட கூட வடக்கனை நம்பி உள்ள நிலைமை ...இவனுங்க அடுத்தவனை கேள்வி கேட்க என்ன தகுதி?? ...


Kasimani Baskaran
ஜூன் 22, 2025 06:39

போதை தரும் கள் விற்போர் அல்லது குடித்து முன்னேறியவர்கள் யாரும் இல்லை. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தஞ்சைக்கு புலம் பெயர்ந்து ஆண்டின் பாதி நாள் கள்ளுக்கடை நடத்துவார்கள். வரும் பொழுது பணத்தோடு திரும்ப வருவார்கள். எல்லையில்லாமல் ஜாலியாக செலவு செய்வார்கள். அடுத்த சீசனில் திரும்ப தஞ்சை மாவட்டம் செல்லும் பொழுது கடனோடு செல்வார்கள்... இப்படிப்பட்ட ஒரு சுழற்சியில் சிக்கி சீரழிந்த பலரை எனக்கு தெரியும். அடுத்தவனை துன்பப்படுத்தி அவனது வாழ்க்கையை கெடுத்து சம்பாதித்த சொத்து நிலைக்காது. பதநீர் மட்டும் விற்று பணக்காரர்களாகிய பலரையும் எனக்கு தெரியும். கற்பக விருட்சம் என்பார்கள் - அதை கள் விருட்சமாக ஆக்கி காலித்தனம் செய்ய வேண்டாம்.


Manaimaran
ஜூன் 22, 2025 05:11

டாக்டருக்கு இனி சனி ஆரம்பம் இவன் எங்கு நின்னாலும் ஜெயிக்க மாட்டான். அடக்க பட வேண்டியவன்


நிக்கோல்தாம்சன்
ஜூன் 22, 2025 04:54

அப்போ கள்ளு இறக்கிட்டு தான் இருக்கீங்க , விடியல் மாடல் காவல்துறை வசம் வைத்திருக்கும் அமைச்சர் தமிழ் படிக்க தெரியுமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை